திங்கள், 16 ஜனவரி, 2023

அடுத்த 2 நாட்களுக்கு உறையப் போகும் மாவட்டங்கள் இவைதான்!

15 1 23

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வருகின்ற 19 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நீலகிரி மற்றும் கோவை மலைப்பகுதிகளில் மேலும் 2 நாட்களுக்கு உறைபனி தொடரும் என எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 15 ஆம் தேதி மற்றும் 16 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கலாம். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் வாய்ப்புள்ளது.

அதேபோல 17 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதே நேரத்தில் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-latest-weather-updates-kovai-nilgiris-get-snow-next-2-days-577132/