புதன், 18 ஜனவரி, 2023

சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு குறைய தொடங்கியுள்ள மக்கள் தொகை!

 

சீனாவில் 60 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் தொகை பெருக்கம் குறைய தொடங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 1961ம் ஆண்டு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் குறைந்து உள்ளது. சீனாவில் 2022ம் ஆண்டு இறுதியில் 1.41175 பில்லியன் மக்கள் தொகை பதிவாகியிருந்தது. இது 2021ம் ஆண்டு இறுதியில் 1,41260 பில்லியனாக இருந்ததாக நாட்டின் தேசிய புள்ளியியல் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில், கடந்த ஆண்டு சீனாவின் பிறப்பு விகிதமானது 1000 பேருக்கு 6.77 பிறப்பு என்ற விகிதத்தில் பதிவாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு 7.52சூக இருந்துள்ளது. இதன் மூலம், அந்நாட்டில் பதிவான மிக குறைந்த பிறப்பு விகிதம் இது என கூறப்படுகிறது.சீனாவில் 1980-2015 வரை பின்பற்றப்பட்ட ஒரு குழந்தை கொள்கை மற்றும் கல்விக்கு அதிகப்படியான செலவு போன்றவை அந்நாட்டில் பல தம்பதிகள் ஒரு குழந்தை அல்லது குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டதும், இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளாக கொரொனா நிலவரம் மக்களை அச்சுறுத்தி வருவதும், இதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி, 2021ம் ஆண்டு முதல் சீன அரசு, அந்நாட்டு மக்களை அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி கேட்டு கொண்டுள்ளது. வரிச்சலுகை, அதிக நாட்கள் மகப்பேறு விடுமுறை, வீட்டுக்கு மானியம் என பல திட்டங்களை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

source https://news7tamil.live/after-60-years-chinas-population-has-begun-to-decline.html