வியாழன், 12 ஜனவரி, 2023

ஆளுனருடன் சட்டமன்றம் வந்த விருந்தினர் மீது உரிமை மீறல் பிரச்சனை

 11 1 23

ஆளுனருடன் சட்டமன்றம் வந்த விருந்தினர் மீது உரிமை மீறல் பிரச்சனை

கடந்த ஜனவரி 9ஆம் தேதி நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது அவை உரிமையை மீறியதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் ஆளுநரோடு வந்த விருந்தனர் ஒருவர் பேரவை நடவடிக்கைகளை தொலைபேசி வாயிலாக பதிவு செய்தது அவை உரிமை மீறல் என்று தி.மு.க., எம்.எல்.ஏ., டி.ஆர்.பி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆராய்ந்து அறிக்கை அளிக்க உரிமை மீறல் குழுவிற்கு சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு உத்தரவளித்துள்ளார்.

அவை உரிமை மீறல் நடந்துள்ளதால், பேரவை உரிமை மீறல் குழு ஆராய்ந்து அறிக்கையளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையின் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/speaker-appavu-about-tamil-nadu-assembly-2023-574957/

Related Posts: