சனி, 17 ஜூன், 2023

ஆளுநருக்கு சட்ட ஆலோசனை தேவை: சபாநாயகர் அப்பாவு விமர்சனம்

 16 6 23

tamil nadu speaker appavu

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை இலாக்கா மாற்றம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்பி மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

ஆளுநரின் நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவதை தொடர்ந்து, தமிழக சட்டப் பேரவை சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது. முதல்வரின் அதிகாரத்தில் தலையிட யாருக்கும் அதிகாரம் கிடையாது.

வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க தேவையில்லை. முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். ஆளுநர் சட்டப்படி சட்ட ஆலோசனைகளை பெற்று நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-speaker-appavu-opinion-governor-rn-ravi-should-take-legal-advice-698287/