செவ்வாய், 13 ஜூன், 2023

தமிழ் நாட்டில் இந்தி உள்ளிட்ட எதை திணிக்க நினைத்தாலும் நடக்காது -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

 13 06 23 

இந்தி தினிப்பு குறித்து பேசிய தமிழ் நாட்டில் எதை திணிக்க நினைத்தாலும் அது
நடக்காது என உலகக்கோப்பை ஸ்குவாஷ் தொடக்க நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் (எக்ஸ்பிரஸ் அவென்யூ)
நாளை (13) முதல் வருகிற 17-ஆம் தேதி வரை ஸ்குவாஷ் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளது. உலக ஸ்குவாஷ் சங்கம் மற்றும் இந்திய ஸ்குவாஷ் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இந்த தொடரை நடத்துகிறது.

இந்தியாவில் ஸ்குவாஷ் தலைநகராக சென்னை பார்க்கப்படும் சூழலில், 12ஆண்டுகளுக்கு
பிறகு சென்னையில் சர்வதேச ஸ்குவாஷ் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா ,ஹாங்காங், சீனா, உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.

ஒவ்வொரு அணியிலும் இரண்டு வீரர், இரண்டு வீராங்கனனைகள் என தலா 4 பேர் களம் காணவுள்ளனர். இந்தியா சார்பில் ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கானா, சவுரவ் கோஷல், அபய் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர். இதனை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி,  நாளை முதல் ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் போட்டிகளை கண்டு
ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்,
இந்தி தினிப்பு குறித்து பேசிய தமிழ் நாட்டில் எதை தினிக்க நினைத்தாலும் அது
நடக்காது என்றார். 9 மாவட்டங்களில் ஸ்குவாஷ் விளையாட்டுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கூறிய அவர், அரசுப்பள்ளி மாணவர்களும் இந்த விளையாட்டை காண வழி செய்யப்படும் என்றார்.


source https://news7tamil.live/in-tamil-nadu-who-talked-about-imposing-hindi-whatever-they-want-to-impose-will-not-happen-minister-udayanidhi-stalin.html

Related Posts: