அறிவிப்பு
கடந்த மார்ச் 28ம் தேதி சேலம் கோட்டை மைதாணத்தில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் திமுக நூல் வெளியீட்டுக் குழு உறுப்பினர் நாகை நாகராஜன் பேசும் போது நபிகள் நாயகத்திற்கு பிறகு முஸ்லிம் இனத்தை பாதுகாக்க வந்த இறைதூதர் தலைவர் கருணாநிதி என்று கூறியதாக பத்திரிக்கையில் செய்தி வந்தது. சமூக வலைதளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவியது.
நபிகள் நாயகத்திற்கு பிறகு இறைதூதர் வரமுடியாது என்பதில் உறுதியான கொள்கை உடையவர்கள் முஸ்லிம்கள் . எனவே நாகை நாகராஜனின் பேச்சை பற்றி செவியுற்ற அனைத்து முஸ்லிம்களுமே வேதனை அடைந்துள்ளனர். எனவே இது தவிர்க்க பட வேண்டும், கண்டிக்க பட வேண்டும். தனது கருத்துக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று உடனடியாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேர, ஜவாஹிருல்லாஹ் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் மூலமாக திமுக தலைமைக்கு செய்தியை புகராக கொண்டு சென்றார்.
மேலும் வாழும் மனிதர்களை புகழ வேண்டும் என்பதற்காக மத உணர்வுகளை புண்படுத்தும் வார்த்தைகளை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளுக்காக எந்த நிலையிலும் அடிப்படை கொள்கைகளை விட்டுத் தர மாட்டோம் என்பதையும் தெளிவு படுத்தியுள்ளோம்.
திமுக தலைமையையும் நேரில் சந்தித்து இது பற்றி புகார் அளிக்க உள்ளோம்.
எனவே யாரும் பதட்டம் அடையவேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
தலைமையகம்