சனி, 10 ஜூன், 2023

“கோயில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்டவர்களை சேர்க்க வேண்டும்”: திருமா ஆலோசனை

 9 6 23

thirumavalavan

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட பட்டியலை சேர்ந்தவர்களை உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்று திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.

இதைப்பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், விழுப்புரம் மேல்பாதி ஊரில் கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அதற்கு, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும் பெண் ஒருவரையும் உறுப்பினராக தமிழக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/thirumavalavan-request-to-include-downtrodden-in-temple-trustee-board-691868/

Related Posts: