என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கான நடவடிக்கைகளை திரும்ப பெறுமாறு தமிழ்நாடு அரசு இதுவரை எந்த கோரிக்கையும் முன் வைக்கவில்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் என்.எல்.சி விவகாரம் தொடர்பாக எழுத்துபூர்வமாக சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.
இதற்கு மத்திய அரசு அளித்த பதில்களாவது:
29.8.1963 அன்று என்.எல்.சி.ஐ.எல் தமிழ்நாடு அரசுடன் 25,900 ஹெக்டேர் அளவுக்கு சுரங்க குத்தகை ஒப்பந்தம் போட்டுக் கொண்டது.
அவ்வப்போது குத்தகைக்கான காலம் புதுப்பிக்கப்படும் நிலையில் 05.12.2036 வரை மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்கான பணிகளும் ஒரு அங்கம், மூன்றாவது சுரங்கத்திற்கான பணிகளை தொடங்க இதுவரை எந்த ஒரு விண்ணப்பமும் நிலக்கரி கட்டுப்பாட்டாளருக்கு கிடைக்கவில்லை. இவ்வாறு மாநிலங்களவையில் மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கம் அளித்துள்ளார்.
source https://news7tamil.live/tamil-nadu-government-has-not-made-any-demand-to-withdraw-operations-for-nlc-3rd-mine-central-govt.html