செவ்வாய், 16 ஜூலை, 2019

அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Image
வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்தார். புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். 
கோவை, நீலகிரி,தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்த பாலச்சந்திரன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தார்
மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும், இது இயல்பை விட 31 சதவீதம் குறைவு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 credit ns7 tv