திங்கள், 21 ஆகஸ்ட், 2023

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு

 மாணவிக்கு அனுமதி மறுப்பு

மாணவிக்கு அனுமதி மறுப்பு

திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து  தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள சோமாசிபாடி கிராமத்தில் அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தி தேர்வு நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலையில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், போளூரைச் சேர்ந்த 540 மாணவர்கள் இந்தத் தேர்வு எழுத வருகை தந்தனர். இந்நிலையில் காலை 10 மணி முதல் மதியம் 12.30 வரை ஒரு பகுதி மாணவர்கள் தேர்வு எழுதவும், மதியம் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை அடுத்த பகுதி மாணவர்கள் தேர்வு எழுதவும் நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் பள்ளியில் அரபு மொழியை  கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக வேலை செய்யும் ஷபானா இந்தி தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்கள் முன்பு ஷபானா அணிந்திருந்த ஹிஜாபை நீக்க வேண்டும் என்று அங்கிருந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஷபானா, ஹிஜாபுடன் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று முறையிட்டார். பள்ளி நிர்வாகம், அவரிடம் ஹிஜாபை நீக்கிவிட்டுதான் தேர்வு எழுத வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்வு அறையைவிட்டு வெளியேற வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது நிலைபாடு தொடர்பாக ஷபானா பள்ளி நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை சமர்பித்தார்.

இதைத்தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினர் பள்ளிக்கு முன்பாக போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சமந்தப்பட்ட இடத்திற்கு வந்த காவல்துறையினர், ஷபானா தேர்வு எழுத தனியறை தருவதாக கூறினார். ஆனால் ஷபானா இதற்கு மறுப்பு தெரிவித்தார். நீண்ட விவாதத்திற்கு பிறகு தான் தேர்வு எழுதும் மனநிலையில் இல்லை என்று ஷபானா தெரிவித்துள்ளார்.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/woman-asked-to-remove-hijab-to-write-exam-in-tiruvannamalai-741275/