ஞாயிறு, 10 செப்டம்பர், 2023

ஆட்சி பற்றி கவலை இல்லை; சனாதன ஒழிப்பு தான் கொள்கை: உதயநிதி உறுதி

 DMK protest in Chennai against NEET exam

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டதுஆட்சியைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க.,வில் புதிதாக தொடங்கப்பட்ட விளையாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்வு முடிந்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ஜி20 மாநாட்டில் பாரத் பெயர் பலகை வைக்கப்பட்டது குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, “மோடி சரியாத்தான் செஞ்சிருக்கார். 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னார். தற்போது ஜி.20 மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை வைத்ததன் மூலம்தான் சொன்னதை செய்துவிட்டார். வாழ்த்துக்கள்.

தி.மு.க என்ற கட்சியே சனாதனத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டதுஆட்சியைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. கொள்கைக்காக முழுமையாக நிற்போம்.

என்னை தொட்டால் 10 லட்சம் தருவதாக சொல்லியுள்ளனர்எனக்கு டிமான்ட் அதிகமாகி கொண்டே செல்கிறது. சனாதனம் குறித்து அம்பேத்கர்பெரியார்அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன். பொய் செய்தி பரப்புவதே பா.ஜ.க.,வின் முழு நேர வேலை .

அ.தி.மு.க என்ற கட்சியின் பெயரில் அண்ணா பெயர் உள்ளது. சனாதனத்திற்கு எதிராக அண்ணாதான் அதிகம் பேசியுள்ளார். எனவே சனாதனம் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சனையில் அ.தி.மு.க.,வின் கருத்தை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சனாதனம் தொடர்பாக நான் பேசியது விமர்சிக்கப்படுவதற்கு காரணம் தனி மனித தாக்குதல் அல்ல... கொள்கை தாக்குதல்” என தெரிவித்துள்ளார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/udhayanidhi-stalin-says-dmk-party-started-for-eradicate-sanathanam