புதன், 3 ஏப்ரல், 2024

ரூ.52,000-ஐ எட்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

 03 04 2024 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52000-க்கு விற்பனையாகிறது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.52000-க்கு விற்பனையாகிறது. 

தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.  தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலை நேற்று  விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430-க்கும்,  சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கும்,  சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் முதன்முறையாக ரூ. 52,000ஐ தொட்டுள்ளது.  இந்த விலை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியின் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது.  வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் அதிரடியாக அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.84-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிலோ வெள்ளி ரூ.84,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


source https://news7tamil.live/rs-gold-price-touched-a-new-high-of-52000-public-in-shock.html

Related Posts: