ஈரானுக்கு சொந்தமான தீவின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேரை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தது அறிந்ததே...
அமெரிக்க வீரர்கள் ஈரான் படையினரிடம் சரணடையும் வீடியோ காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வீரர்கள் 10 பேரும் ஈரான் படையினருக்கு அஞ்சி கீழே அமர்ந்து, ஈரான் படையிடும் மன்னிப்பு கேட்க்கும் வீடியோ ஊடகங்களில் வெளியாகி பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகின்றன.
ஈரானுக்கு சொந்தமான பார்சி தீவு அருகில் உள்ள கடல் எல்லையில் நுழைந்த அமெரிக்க வீரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேண்டுமென்றே ஈரான் கடல் எல்லையில் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரியவந்ததால் விடுவிக்கப்பட்டனர்.
வீரர்கள் தெரியாமல் நுழைந்ததுக்கு அமெரிக்க வெளியுறவு துறை மன்னிப்பும் மேலும் விடுவிக்கப்பட்டதற்கு நன்றியும் கூறியுள்ளது.
ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட வீரர்கள் சரணடையும் வீடியோவை பலர் சமூகவலைதளங்களில் அமெரிக்காவை கிண்டல் செய்து வருகின்றனர்.
-1:14