வெள்ளி, 1 ஜனவரி, 2016

இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கோ அல்லது இறந்த நாள் அனுஷ்டிப்பதற்கோ எந்த வித அனுமதியும் இல்லை,

ஆடம்பரத்தை விரும்பாத மார்க்கம்.....!!
உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தி மன்னர் சல்மான் அவர்களுக்கு நேற்று பிறந்தநாள் தினம்.
மன்னர் சல்மான் அவர்களுக்கு பிறந்தநாள் என்று விக்கிபீடியாவை பார்த்து தான் நாம் தெரிந்து கொண்டோம்.
ஏனென்றால் சவூதி அரேபியாவில் அதற்கான அறிகுறிகள் எந்த இடத்திலும் தென்படவில்லை. அரசு அறிவிப்போ, மன்னர் மாளிகை அறிவிப்போ, SPA செய்தி நிறுவன அறிவிப்போ எதிலும் எந்த அறிகுறியும் இல்லை.
இஸ்லாத்தில் பிறந்த நாள் கொண்டாடுவதற்கோ அல்லது இறந்த நாள் அனுஷ்டிப்பதற்கோ எந்த வித அனுமதியும் இல்லை,
இஸ்லாமிய மார்க்கம் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளதால் உலக பொருளாதாரத்தில் முன்னணியில் இருந்தும் இஸ்லாமிய கொள்கைகளை சவூதி அரேபியா பின்பற்றி வருகிறது.
அதேப்போல் தமிழகத்திலும் எந்த இஸ்லாமிய இயக்க தலைவர்களும் பிறந்தநாள் கொண்டாடி யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.
இஸ்லாம் ஆடம்பரத்தை விரும்பாத, அன்பையும், அமைதியையும், எளிமையையும், மனிதநேயத்தையும் போதிக்கக்கூடிய மார்க்கமாகும்.