ஞாயிறு, 10 ஜனவரி, 2016

மீத்தேன் கசிவு செய்தி

மீத்தேன் கசிவு செய்தியை வெளியிட்ட தமிழ் இந்து(10.01.2015) நாளிதழுக்கு நன்றி!
கலிஃபோர்னியா மீத்தேன் பெருங்கசிவு பற்றிய செய்தி!
மூக்கிலிருந்து இரத்தக்கசிவு, தலைவலி, குமட்டல் என்று பல்வேறு பாதிப்புகள் அப்பகுதி மக்களுக்கு ஏற்பட்டிருக்குன்றன.மக்கள்
வசிக்கும் பகுதியிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருக்கும் ஒரு மலை மீது இந்த எரிவாயுக்கிணறு அமைந்திருக்கிறது.
(நமது காவிரிப்படுகையில் மக்கள் வாழும் வேளாண் நிலத்துக்கு நடுவேயே ஓ என் ஜி சி யின் மீத்தேன் கிணறுகள் அமைய
விருக்கின்றன.)
கசிவை சரி செய்ய இரண்டு மாதங்களாக அமெரிக்க நிறுவனம் எடுத்த முயற்சிகள் தோல்வி.( அமெரிக்காவிலேயே அப்படி.. இந்தியாவில் மீத்தேன் கசிந்தால் எப்படி?)
விஷயம் பெரிய அளவுக்குச் சென்ற பிறகுதான் வெளியுலகுக்கு செய்தி வருகிறது.அதுவரை ஏன் உள்ளூர் செய்தியாகவே கையாண்டீர்கள் என்ற விமர்சனமும் ஊடகங்கள் மீது எழுந்திருக்கிறது. கூடவே, எண்ணெய் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வழங்கும் நிதிதான் எல்லோர் வாயையும் மூடச்செய்கிறதா ர்ன்ற விமர்சனத்தையும் எழுப்பியிருக்கிறார்கள்.( மீத்தேன் பிரச்சினையைப் பொருத்தவரை தமிழக ஊடகங்களின் ஆக்கபூர்வமான பணி தொடரவேண்டும்..வாழ்த்துகள்!)

Related Posts: