திங்கள், 25 ஏப்ரல், 2016

கேரளாவில் வாக்குப் பதிவு தினத்தில் வாக்காளர்களுக்கு 10 லட்சம் மரக்கன்று கொடுத்து பசுமையை மீட்க திட்டம்


வரும் மே 16-ம் தேதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலைப் பயன்படுத்தி, கேரள மாநிலத்தை மீண்டும் பசுஞ்சோலையாக மாற்ற சில மாவட்ட நிர்வாகங்கள் திட்டமிட்டுள்ளன.
கேரள மாநிலத்தின் பல பகுதி களில் வெயில் வாட்டி எடுக்கிறது. மாவட்ட நிர்வாகத்தினர் புதுமை யான முறையில் பசுமையை மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
வயநாடு, பத்தனம் திட்டா போன்ற பகுதிகளில் வாக்காளர் களுக்கும் வேட்பாளர்களுக்கும் மரக்கன்று அளிக்க திட்டமிட் டுள்ளனர். மேலும், மரக்கன்று நடுதலின் அவசியம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
வயநாடு மாவட்ட ஆட்சியர் கேசவேந்திர குமார் இதுதொடர் பாகக் கூறியதாவது:
வாக்குப்பதிவு தினமான மே 16-ம் தேதி வாக்காளர்களுக்கு குறைந்தது 10 லட்சம் மரக்கன்று கள் தர திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்துக்கு ‘ஞாபக மரம்’ எனப் பெயரிட்டுள்ளோம்.
பாரம்பரிய மர வகைகள், குறிப்பாக பழம் தரக்கூடிய, பூ பூக்கக் கூடிய மரங்கள், மூங்கில்கள் ஆகிய மரக்கன்று களை வழங்க உள்ளோம். முதல் முறை வாக்காளர்கள், மூத்த குடி மக்கள், மாற்றுத் திறனாளிகள், யாரெல்லாம் வாக்களிக்க வருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்படும்.
மிகக் குறைந்த வாக்குகள் பதிவாகும் 47 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம்.
வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, அந்தப் பகுதிகளில் வாக்களிக்க வருபவர்களுக்கு மரக்கன்று வழங்க முடிவு செய்துள்ளோம்.
மரக்கன்றுகளை அவர்கள் தங்களது வீடு, தோட்டத்திலோ அல்லது பொது இடத்திலோ நடலாம். பொது இடத்தில் நட்டால் அக்கன்றுகளை சிறப்பு குழுவினர் கண்காணித்து வளர்ப்பர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பகுதியாக வய நாடு அண்மையில் அறிவிக்கப்பட்டி ருப்பது குறிப்பிடத்தக்கது.
images