சனி, 30 ஏப்ரல், 2016

ஈஸி ஐஸ்க்ரீம்


Homemade Vanilla Icecream-jpg-997கோடைய இப்பவே குளு குளுனு என்ஜாய் பண்ண கண்ட கண்ட ஜஸ்க்ரீம சாப்பிட்டு உடலை கெடுத்துக்காம.. வீட்டிலேயே ஈஸியா ஹெல்த்தியா ஐஸ்க்ரீம் செய்து நீங்களும் சாப்பிட்டு உங்க குழந்தைகளுக்கும் கொடுங்க. இந்த சம்மரை உங்க குடும்பத்துடன் கூலா கொண்டாடுங்க………!
தேவையான பொருட்கள்:
பால் – 1 லிட்டர்
சர்க்கரை – தேவைக்கேற்ப
சோள மாவு – 2 டீ ஸ்பூன்
வெண்ணெய் – 4 டீ ஸ்பூன்
வெனிலா எசன்ஸ் – சிறிது

செய்முறை:
* அடுப்பின் தீயை குறைவாக வைத்து பாலை நன்கு காய்ச்சவும்.
* பின் அதில் சர்க்கரை சேர்த்து நன்கு காய்ச்சவும்.
* சோள மாவை அரை கப் பாலில் கரைத்து அடுப்பில் இருக்கும் பாலுடன் சேர்க்கவும்.
* அதனுடன் வெண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.
* பிறகு வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு ஆற வைக்கவும். அந்த கலவையை எலக்ட்ரிக் பீட்டர் (electric beater) கொண்டு நன்கு கலக்கவும். பிறகு ஃப்ரீசரில் வைக்கவும்.
* 1 மணி நேரம் கழித்து மீண்டும் அதை வெளியில் எடுத்து பீட்டரில் நன்கு கலக்கி ஃப்ரீசரில் (freezer) மறுபடியும் வைத்து செட் ஆனதும் பரிமாறவும்.
குறிப்பு:
நாமே வெண்ணெய் செய்து சேர்த்தால் இன்னும் சுவையாகும். தயிரை பீட்டர் கொண்டு அடித்தால் வெண்ணெய் கிடைக்கும். இந்த ஐஸ்க்ரீமையே சாக்லேட், மேங்கோ என பல வகையில் மாற்றிக்கொள்ளலாம்.