சென்னையில் வரும் 28 ஆம் தேதி வரை கடுமையான அனல்காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று சென்னையில் 41 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. இந்நிலையில் நேற்றை விட இன்று வெப்பத்தின் தாக்கம் ஒரு டிகிரி குறைந்திருந்தாலும் சென்னை மக்களுக்கு இது பெரிய மாற்றத்தை தரவில்லை. குறிப்பாக திறந்தவெளிப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த கடுமையான வெப்பக்காற்று ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிமை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருப்பினும் மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதன்மூலம் சென்னை வெப்பநிலையில் மாற்றம் வரலாம் எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.