இந்தியாவின் குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போன் ரூ.888-க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த டாகோஸ் (Docoss) என்ற செல்போன் நிறுவனம் டாகோஸ் எக்ஸ் 1 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த குறைந்த விலை ஆண்ட்ராய்ட் போனுக்காக ஆன்லைன் ஆர்டர்கள் பெறப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சத்தமில்லாமல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த டாகோஸ் போன்கள், மே மாதம் முதல் வாரத்தில் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த போன் 4 இன்ச் தொடு திரையுடன், 1.2 ஜிகாஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 2 எம்பி பின்பக்க கேமிராவும், முன்பக்க விஜிஏ கேமிராவும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
for online booking (http://docoss.co/)