வெள்ளி, 29 ஏப்ரல், 2016

Hadis

ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார்.
அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ சயீத் அல் குத்ரீ (ரலி),