வியாழன், 28 ஏப்ரல், 2016

நமக்கு நமே வைக்கும் ஆப்பு

எச்சரிக்கை
நமக்கு நமே வைக்கும் ஆப்பு
தலையணையோடு மொபைலை வைத்துக்கொண்டு தூங்குபவரா நீங்கள்.?

புற்றுநோய் :
மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் உண்டு.
doop
ரேடியேஷன் :
மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதய பாதிப்புகள் :
மொபைல் போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பக புற்றுநோய் :
குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
தீ :
மொபைல் போன்களால், உங்கள் தலையணை தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஓய்வில் பாதிப்பு :
இரவு என்பது ஓய்வு கொள்ளும் நேரம், உறக்கம் கொள்ளாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் குறையும் பாதிப்பும் ஏற்படும்.
அலாரக்கடிகாரம் :
அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணை அருகே வைக்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு அலாரக்கடிகாரம் வாங்கி விடுவதே நல்லது.

வை–பை ரேடியேஷன் :
வை-பை ரேடியேஷன் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி.!!
இதெல்லாம் கட்டுக்கதை இது எல்லாம் யாரோ கொலுத்தி போட்டது என நினைக்காமல் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்று.
தகவல் பரிமாற்றத்தில் துவங்கி இன்று பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு சேவைகளை வழங்கி வரும் தொழில்நுட்பங்களில் அதிகளவு பங்கு வகிப்பது ரேடியோ சிக்னல்கள் எனலாம்.
பொதுவாக ரேடியோ, தொலைகாட்சி, மைக்ரோ வேவ், செல்போன் மற்றும் வை-பை கருவிகளில் இருந்து அதிகப்படியான ரேடியோ சிக்னல்கள் வெளிப்படுகின்றன.
இன்று இவை அனைத்தும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட நிலையில் இவைகளை சற்றே ஒதுக்கி வைப்பது குழந்தைகளுக்கு ஏற்படும் தீமையை குறைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.