திங்கள், 25 ஏப்ரல், 2016

சீனாவில் இருந்து பால், பால் பொருட்கள், சில செல்போன்கள் இறக்குமதி செய்ய தடை


புது தில்லி : சீனாவில் இருந்து பால் மற்றும் பால் பொருட்கள், சில குறிப்பிட்ட வகை செல்போன்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் அதன் தரத்தில் இல்லை என்பதால் அவற்றை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தெரிவித்தார்.
மேலும், சர்வதேச செல்போன்களுக்கான குறியீட்டு எண்களைக் கொண்டிருக்காத மற்றும் இதர பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் இல்லாத செல்போன்களையும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்திருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.