செவ்வாய், 26 ஏப்ரல், 2016

உம்ரா வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்றிக்கொள்ளும் அனுமதியை சவூதி அரசாங்கம் அனுமதித்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.

http://saudigazette.com.sa/…/now-umrah-visas-can-converted…/
உம்ரா கடமைக்காக சவூதி அரேபியா செல்லும் யாத்ரீகளுக்கு தனது கடமை முடிந்தவுடன் உம்ரா வீசாவை சுற்றுலா வீசாவாக மாற்றிக்கொள்ளும் அனுமதியை சவூதி அரசாங்கம் அனுமதித்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.
தேசிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய தளங்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சுல்தான் பின் சல்மான் இதனை ஆரம்பித்து வைத்தார்.
முஸ்லிம்களுக்கான சுற்றுலாத்தளமாக இராஜியத்தை மாற்றும் முகமாக இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
தனது உம்ரா கடமையை முடித்தவுடன் உம்ரா விசாவில் ஜித்தாவை தவிர நாட்டில் வேறு இடங்களுக்கு செல்லும் அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.
இதன்படி நாட்டில் உள்ள வரலாற்று சம்பந்தப்பட்ட இடங்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும் தமக்கு விருப்பமான பொருற்களை வாங்கும் தேவைகளையும் முடித்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது.