வியாழன், 28 ஏப்ரல், 2016

பதவியேற்று 2வது நாளே அவைத் தலைவரின் எச்சரிக்கைக்கு ஆளான சுப்ரமணியன் சுவாமி



swamyபுது தில்லி : ஹெலிகாப்டர்  ஊழலில் சோனியாவின் பெயரை தொடர்புபடுத்தி மாநிலங்களவையை அதிரச் செய்த சுப்ரமணியன் சுவாமி, இன்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்து அமளிக்கு வழிவகுத்தார்.
மாநிலங்களவையில் இன்று அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைத் தொடர்பான விவாதம் ஒன்று மாநிலங்களவையில் முன் வைக்கப்பட்டது. அப்போது பேசிய சுப்ரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
அதனால், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களை குரியன் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். அது தோல்வி அடைந்தது.
மாநிலங்களவைத் தலைவர் பி.கே. குரியன், சுப்ரமணியன் சுவாமி இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
“உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது இதுக்கும். சுப்ரமணியன் சுவாமி.. நீங்கள் தேவையில்லாமல் அமளியைத் தூண்டும் வகையில் பேசுகிறீர்கள். நீங்கள் தூண்டுகிறீர்கள்” என்று குரியன் கோபமாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்களை, ஊடகங்கள் செய்தியாக்க வேண்டாம் என்றும், அவர் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டார்.