ஒரு சோகக் கணக்கு...
இந்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் சவுத்ரி ராஜ்ய சபையில் தாக்கல் செய்த ஒரு அறிக்கை முஸ்லிம்கள சிறைவாசம் குறித்து தெரிய வருகிறது..
2014 ம் ஆண்டு வரையிலான தேசிய குற்ற ஆவணங்கள் காப்பக அறிக்கை படி தேசம் முழுவதும் உள்ள சிறைகளில் 82190 முஸ்லிம்கள உள்ளதாகவும், இவர்களில் 21550 பேர் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்றும், சுமார் 59550 பேர் பல்லாண்டு காலமாக விசாரணை கைதிகளாக இருப்பதாக தெரிவித்துள்ளார்..
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள 14.2 சதவீதம் மட்டுமே.. ஆனால் சிறைக்கைதிகளில் முஸ்லிம்கள 26.4 சதவீதம் என்பது நிச்சயம் சோகமான கணக்கு தான்....