உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஸ்கீட் பிரிவில் இந்தியவீரர் மைராஜ் அகமது கான் முதல்முறையாக பதக்கத்தை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி பிரேசிலின் ரியோடி-ஜெனிரோ நகரில் ஏப்ரல் 13-ஆம் தேதியில் இருந்து இன்று வரை நடைபெற்றது.
இதில் ரைஃபில், பிஸ்டல், ஷாட்கன் ஆகிய பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் மைராஜ் அகமது கான், ஆடவர் ஷாட்கன் ஸ்கீட் பிரிவில், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, மார்குஸ் ஷெவன்சன் முதலிடம் பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார். இத்தாலியைச் சேர்ந்த டமாரோ வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம் மைராஜ், ரியோ-ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதுடன், ஷாட்கன் ஸ்கீட் பிரிவில் முதல் பதக்கத்தை பதிவு செய்துள்ள இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.