செவ்வாய், 26 ஏப்ரல், 2016

எப்படி இருக்கணும் ரெஸ்யூம்?




'' பணிக்கான உங்கள் தகுதி சரிபார்ப்பு, ரெஸ்யூமிலேயே ஆரம்பித்து விடுகிறது...'' என்கிறார் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றின் ஹெச். ஆர். ஆன ஆனந்த், ஒரு ரெஸ்யூம் எப்படி இருக்கலாம் என்பதற்கு அவர் தரும் டிப்ஸ்: 

01 . ரெஸ்யூமை நல்ல தரமான A 4  சைஸ் பேப்பரில் பிரிண்ட் செய்வது நல்லது. 

02 . ஒரு வரி எழுதியுருந்தாலும், அதில் முழுத் தகவலைத் தெளிவாகச் சொல்லுங்கள். வளவளப்பு இருந்தால் எரிச்சல்தான் வரும். 

03 . கல்லூரியில் செய்திருக்கும் புராஜக்டின் தலைப்பை எழுதுங்கள். அதுமட்டும் இல்லாமல், புராஜக்ட் குழுவில் உங்களின் பங்களிப்பைப் பற்றியும் ஒரு வரியில் குறிப்பிடுங்கள். 

04 . விண்ணப்பித்திருக்கும் பதவிக்குத் தேவையான தகுதிகள் இருந்தால் அதை குறிப்பிட மறக்க வேண்டாம். 

05 . முன்பு வேலை பார்த்த பணியிடத்தைக் குறை சொல்லாதீர்கள். 

06 . குடும்பச் சூழ்நிலைகளையும், உடல் நலப் பிரச்சினைகளைப் பற்றியும் எழுதாதீர்கள். ஒருவேளை உடல்நலக் குறைபாடு காரணமாக, ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தில் இருந்து விலகியிருந்தால், நேர்காணலில் மட்டும் தெரிவிக்கலாம். 

07 . ரெஸ்யூமில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்தால் கவனமற்றவர் என்று நினைத்துக்கொள்வார்கள். முடிந்தவரை பிழைகளைத் தவிருங்கள். 

08 . ரெஸ்யூமில் தடித்த (போல்டு) மற்றும் சாய்ந்த (இட்டாலிக்) எழுத்துக்கள் இடம் பெறலாம். ஆனால் ஒரே சைஸ் எழுத்தாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

09 . ரெஸ்யூமை வண்ணம் கொண்டு அலங்காரம் செய்யாதீர்கள். எளிமையாக இருக்கட்டும். 

10 . ஒரு நிறுவனத்திற்காக தயார் செய்த ரெஸ்யூமை, மற்ற எல்லா நிறுவனத்திருக்கும் அனுப்பக் கூடாது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் விண்ணப்பிக்கும்போது, பிரத்யோகமாக ரெஸ்யூம் தயாரித்து அனுப்புவது மிகவும் நல்லது. 

11 .  இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரெஸ்யூமைப் பார்த்து புதிய தகவல்களைச் சேர்த்து, அப்டேட் செய்துகொண்டே இருங்கள். 

12 . நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, எதற்க்காக விண்ணப்பிக்கிறீர்கள்? உங்களை வேலைக்குச் சேர்ப்பதால் அந்த நிறுவனத்திற்கு என்ன லாபம்? என்பதைக் கூட நீங்கள் குறிப்பிட்டு அனுப்பலாம். அப்படி அனுப்பும்போது கவனமாக வார்த்தைகளை கையாள வேண்டும். 

13 . முடிந்த வரை சுயபுலம்பலைத் தவிருங்கள். நண்பரின் ரெஸ்யூமில் பெயரை மட்டும் மாற்றி 'ஈயடிச்சான் காப்பி' வேண்டாம். 

Related Posts:

  • நூதன கான்கிரீட் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டால் தானாகவே சரிசெய்துகொள்ளும் நுண்ணுயிர் தொழில்நுட்பம் கொண்ட கற்களை கண்டுபிடித்துள்ளனர்.இதிலுள்ள நுண்ணுயிர்கள் பெருகி … Read More
  •  நோன்பு நோற்பது கட்டாயக் கடமை. புனித ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தி பெற்ற அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதைத் திரு… Read More
  • 365 நாளில் மோடியின் சாதனை இதுதான் சாதனை~~~~~~~~~~~~~~~~~~~~~ 365 நாளில் மோடியின் சாதனை என்னவென்று பார்த்தால்365 விதமாக ஆடை அணிந்ததுதான்...! வேறு எந்தப் பிரதமரும் செய்… Read More
  • 786 " 786 " என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?என்ற பல கேள்விகள் மனதில் எழத்தான் செய்கின்றன ! இதற்கு விடையை சிறி… Read More
  • மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி ரொகிங்கியா மக்கள் இந்தியாவின் சிறுபான்மையினர் மீது ஆர்.எஸ்.எஸ் வளர்த்து வரும் வெறுப்பு அரசியலைப் போன்று நீண்ட வரலாறு கொண்ட பழைய வெறுப்புக்கு பலியான… Read More