உலகின் முன்னணி டெக் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் டெக்னாலஜி காலத்தால் பின்தங்கிவிட்டது என்று சீன மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான லீ எகோவின் நிறுவனரும், தலைமை செயல்அதிகாரியுமான ஜியா யூஎடிங் விமர்சித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள ஜியா யூஎடிங் மும்பையில் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அவர், ஆப்பிள் நிறுவனத்தின் டெக்னாலஜி காலத்துக்கு ஏற்றவாறு அப்டேட் ஆகவில்லை என்று விமர்சித்தார்.
மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் எஸ்இ மாடலைக் கடுமையாக விமர்சித்த அவர், சமீபத்தில் வெளிவந்த மொபைல் போன் மாடல்களிலேயே வலுவில்லாத டெக்னாலஜியைக் கொண்ட போன் அது என்று கூறினார். இதனால், மொபைல் போன் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனம் தாமதப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.