சனி, 2 ஏப்ரல், 2016

அமெரிக்க விமானத்தில் இருந்து முஸ்லிம் குடும்பம் வெளியேற்றம்

அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் பாதுகாப்புக் கருதி 5 பேர் கொண்ட முஸ்லிம் குடும்பத்தினரை விமான ஓட்டி வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் வசித்து வரும் எமான் ஏமி சாட் ஷெப்லி என்ற பெண் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சிகாகோ விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டன் செல்ல அமெரிக்க ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார். தங்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடம் வேண்டும் என்று விமானப் பணிப்பெண்ணிடம் ஷெப்லி கோரிக்கை வைத்தார். இதற்கு பைலட் மறுப்பு தெரிவித்து, அவர்களை குடும்பத்துடன் விமானத்தில் இருந்து இறங்குமாறும், விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்றும், இது எங்களது பாதுகாப்பிற்கான நடவடிக்கை என்றும் விமான ஓட்டி தெரிவித்துள்ளார். 
 
hju
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷெப்லி, இது பாரபட்சமான நடவடிக்கை என்று கூறி ஆட்சேபம் தெரிவித்துள்ளார். 

இவரது குடும்பத்தினர் சார்பில் அமெரிக்க-இஸ்லாமிக் கவுன்சில் அமெரிக்க விமான ஏர்லைன்சுக்கு விமான ஓட்டி மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை கோரி கடிதம் அனுப்பி உள்ளனர். 

இந்தக் கவுன்சிலின் செயல் இயக்குனர் கூறுகையில், ”பாதுகாப்பு என்பது பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதே தவிர அவர்களை கொடுமைப்படுத்துவது அல்ல” என்று தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ள ஷெப்லி தற்போது தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.