வியாழன், 30 ஜூன், 2016

Chennai எச்சரிக்கை செய்தி.





'''''''''''''''''''''''''''''''''''’'''''''''''''''''''''''''''''''''''''''''''’’''''’'''’'’’’'
9969777888 பெண்களே தோழிகளே குறிச்சுக்கோங்க...!!! அனைவருக்கும் பகிருங்கள் சென்னை நகர காவல்துறை பெண்களுக்காக பிரத்யேக மொபைல் எண்களைக் கொண்டு சேவையும் பாதுகாப்பும் தருகின்றனர்...!!
பெண்கள் ஆட்டோவிலோ, காரிலோ மற்றும் எந்த வாடகை வண்டியில் ஏறினாலும் அல்லது பேச முடியாத அவசர சூழ்னிலையிலும் 9969777888 என்ற எண்ணுக்கு ஒரு SMS அனுப்பினால் போதும் உடனே உங்களுக்குடைய ஆதாரத்திற்கு மறுமுனையில் இருந்து ஒரு REPLY SMS வரும். அது முதல் GPRS மூலம் நீங்கள் பயணம் செய்யும் வண்டியை கண்காணிக்க தொடங்கி விடுவார்கள்...!!!
அவசர உதவி WhatsApp கோவை எண்.


30 பவன் தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்

சாலையில் கிடந்த 30 பவன் தங்க நகையை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர் கேரளாவை சேர்ந்த ரவீந்தரனை ஒரு like கொடுத்து பாராட்டுவோம்.

உயர் ரத்த அழுத்தமா? முருங்கைக்கீரை சூப் குடியுங்கள்!



முருங்கையில் புரதச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி,சி, கே மற்றும் கால்சியம்,மாங்கனீசு உள்ளிட்ட தாது உப்புக்கள் நிறைவாக உள்ளன.
இவை உடலுக்கு ஆற்றலைத் தரும்.
இரண்டு கைப்பிடி அளவு முருங்கைக் கீரையை நீரில்அலசி, அத்துடன் சின்ன வெங்காயம் கைப்பிடிஅளவு, கொத்தமல்லி விதை ஒரு தேக்கரண்டி,சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து முருங்கை சூப் செய்து, குடித்துவர, ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கைஅதிகரிக்கும்.
சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது சிறந்தது. கர்ப்பிணிகளும்இதை எடுத்துக்கொள்ளலாம்.

அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ, அஃப்வ அன்னி.

அல்லாஹும்ம இன்னக அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ, அஃப்வ அன்னி.
‪#‎இறைவா‬ நீ மன்னிக்க கூடியவனாக இருக்கின்றாய். மன்னிப்பதையே விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக!

இடுப்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் வெந்தயக்கீரை..!



வெந்தயக்கீரை, வெந்தயம் இரண்டுமே மருத்துவப் பலன்கள் கொண்டவை.
குறிப்பாக வெயில் காலத்தில் வெந்தயகீரையை சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும்.
வெந்தயக்கீரையின் மருத்துவ நன்மைகள்
வெந்தயக்கீரையை வேகவைத்து தேன் விட்டுக் கலந்து, அளவாகச் சாப்பிட்டுவந்தால், மலம் எளிதாக வெளியேறும்.
நெஞ்சு வலி, இருமல், மூலம் மற்றும் செரிமானப் பாதையில் இருக்கும் புண்கள் குணமாகும்.
இதன் இலையை எடுத்துச் சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சையைச் சேர்த்துக் குடிநீர் செய்து தேன் கலந்து சாப்பிட்டுவந்தால், நெஞ்சு வலி, மூச்சடைப்பு குணமாகும்.
வெந்தயக்கீரையை நன்கு வேகவைத்து, சிறிது வெண்ணெய் சேர்த்துக் கலக்கி உட்கொள்ள, பித்தம் அதிகமாவதால் ஏற்படும் மயக்கம் குணமாகும்.
இந்தக் கீரையுடன், பாதாம் பருப்பு, கசகசா, கோதுமை நெய், பசு நெய், பால், சர்க்கரை சேர்த்து, களிபோல கிண்டி சாப்பிட்டுவந்தால், உடல் வலுவடையும். இடுப்பு வலி நீங்கும்.
வெந்தயக்கீரையுடன் சீமை அத்திபழத்தைச் சேர்த்து அரைத்து, கட்டிகளின் மீது பற்றுப் போட, கட்டிகள் விரைவில் பழுத்து உடையும். படை மீது பூசினால், விரைவில் சரியாகும்.
வெந்தயக்கீரையை ஊறவைத்து, அந்தத் தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்துவந்தால் வாய்ப்புண் ஆறும்.
விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சர்க்கரை நோயாளிகள் இந்தக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது!

'ஒசந்த சாதி' ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஒரு கேள்வி..
சுவாதி என்னும் பெண்ணை அரிவாள் ஒருமுறை கொன்றது. சாதி பலமுறை கொல்கிறது!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பெயரில் வெளியாகியிருக்கும் ஒரு பதிவு, சமூக வலைத்தளங்களில் வெகு விரைவாகப் பரவிக் கொண்டுள்ளது. இப்போது அது குறித்து அவரே ஒரு விளக்கத்தையும் ஒரு தொலைக்காட்சியில் கூறியுள்ளார்.
அந்தப் பதிவைத் தான் உருவாக்கவில்லை என்றும், தனக்கு வந்த ஒரு செய்தியை, அதில் நியாயம் இருப்பதாகத் தானும் அந்த நேரத்தில் கருதியதால், பிறருடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் தமிழ் எழுத்துகளே இல்லை என்றும், ஆங்கிலம்தான் உள்ளதென்றும் கூறியுள்ளார். (ஒருவேளை சமற்கிருத எழுத்துகளையும் வைத்திருக்கக்கலாம். தமிழ் எழுத்து இருக்க வாய்ப்பில்லைதான்.)
அவர் கூற்றை நாம் அப்படியே ஏற்றுக்கொள்கிறோம். ஆனாலும் அவர் நேர்காணல் வெளியிட்டுள்ள பல சாதிய நஞ்சினை நம்மால் ஏற்க முடியவில்லை.
சுவாதியின் படுகொலையை யாரும் கண்டிக்கவில்லை என்பது எள்ளளவும் உண்மையில்லை. அனைவரும் கண்டித்தனர். அனைத்துக் கட்சியினரும் கண்டித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உட்படப் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர். இது போன்ற தரங்கெட்ட பதிவுகளைப் பகிர்ந்ததன் மூலம் ஒய்.ஜி. மகேந்திரன் போன்றவர்கள்தான், சுவாதி கொலையைப் பற்றி நீண்டிருக்க வேண்டிய விவாதங்களைச் சாதி பற்றியதாக மாற்றிவிட்டனர்.
தனக்கு வரும் செய்தியை மற்றவர்களுக்குப் பகிர்வதற்கு முன், அந்தச் செய்தியின் தரம் பற்றி எண்ணிப் பார்க்க வேண்டாமா? திராவிடப் பொறுக்கிகள், காம்ராட் கயவர்கள் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிற அந்தப் பதிவை, மக்களால் அறியப்பெற்ற நீங்கள் பகிரலாமா? "தெருப்பொறுக்கி ஒய்.ஜி.மகேந்திரன்" என்று யாராவது எனக்கு ஒரு பதிவை அனுப்பினால், அதனை நான் கண்டிப்பேனே அல்லாமல், அதனை இன்னொருவருக்கு அனுப்ப மாட்டேன். அப்படி அனுப்பிவிட்டு, அது என்னுடையதில்லை என்று சொல்லும் கோழையாகவும் வாழமாட்டேன்.
தான் அதனை உருவாக்கி அனுப்பவில்லை என்றாலும், அந்தக் கருத்தில் அந்த நேரத்தில் தனக்கு உடன்பாடு இருந்தது என்று கூறுவதன் மூலம், தன் சாதி வெறியை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆம், அது சாதி வெறிதானே அன்றிச் சமூக அக்கறை அன்று. சமூக அக்கறை உடையவராக மகேந்திரன் இருந்திருப்பாரரேயானால், யார் கொலை செய்யப்பட்டாலும் குமுறியிருப்பார், குரல் கொடுத்திருப்பார். தருமபுரி இளவரசன், திருச்செங்கோடு கோகுலராஜ், உடுமலைப்பேட்டை சங்கர் போன்றவர்கள் கொல்லப்பட்டபோது, எத்தனையோ செய்திகள் வலைத்தளங்களில் உலவினவே! அவற்றுள் எத்தனை செய்திகளை அவர் மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்? அவருடைய அம்மா நடத்தும் பள்ளியில் ஒரு சிறுவன் நீச்சல் குளத்த்தில் இறந்து போனானே, அவனுக்காக மகேந்திரன் தெருவுக்கு வந்து போராடினாரா?
போகட்டும், அவர்களெல்லாம் சூத்திரர்கள், தலித்துகள்! பார்ப்பன சாதியில் பிறந்த காஞ்சி சங்கரராமன் கொலை செய்யப்பட்டபோது, எத்தனை பதிவுகளை மகேந்திரன் பகிர்ந்துள்ளார்? அந்த வழக்கில் குற்றம் சாற்றப்பெற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டபோது, கொந்தளித்தாரா மகேந்திரன்? உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்பதில் எந்தப் பார்ப்பனருக்காவது ஆர்வம் உண்டா?
ஒரு தொலைக்காட்சி, சங்கரராமன் கொலைவழக்கில் தீர்ப்பு வெளிவந்த நாளில், நடிகர் எஸ்.வி.சேகரிடம் பேட்டி கண்டது. "இது இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி" என்றார் அவர். அடுத்து என்னிடம் கேட்டார்கள், "அடடா, சங்கரராமன் ஒரு முஸ்லீம் என்று எனக்கு இதுவரை தெரியாமல் போய்விட்டதே" என்றேன் நான்.
சங்கர்ராமனைக் கொன்றவர்கள் மீதும் பார்ப்பனர்கள் கோபம் கொள்ளவில்லை. சங்கராச்சாரியைக் கைது செய்த ஜெயலலிதாவின் மீதும் அவர்கள் கோபம் கொள்ளவில்லை. சாதி வெறிக்கு இதனை விடச் சிறந்த சான்று வேறு என்ன இருக்க முடியும்?
இப்போதும் தமிழக அரசின் மீதோ, முதலமைச்சர் ஜெயலலிதா மீதோ அவர்கள் ஒரு சிறு கல்லையும் எடுத்து எறியவில்லை. அவரைப் பாதுகாப்பதில் அவ்வளவு கவனமாக உள்ளனர். இரண்டு மணி நேரம் அந்த உடலின் மீது ஒரு துணியைக் கூடப் போர்த்தாமல், அங்கேயே நின்ற காவல் துறை மீதும், அத்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் மீதும் இவர்களுக்கெல்லாம் எந்த வருத்தமும் இல்லை.
தொலைக்காட்சி நேர்காணலில், தன்னை அறியாமல் நடிகர் மகேந்திரன் வெளியில் வந்து விழுந்திருக்கும் இடம் ஒன்று உள்ளது. "ஒசந்த சாதி" என்பதால் யாரும் கவனிக்காமல் விட்டு விட்டார்களோ என்று தோன்றியதாகச் சொல்கிறார்.
நீங்கள் "ஒசந்த சாதி" என்றால் நாங்களெல்லாம் யார் மகேந்திரன்? சுவாதியைக் கொன்றவர்களை மட்டுமில்லை, உங்களைப் போன்ற சாதி வெறியர்களையும் கைது செய்ய வேண்டாமா?

முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களின் துவேசத்தை விஷமாக கக்குகின்றனர்..



சென்னை வெள்ளத்தில் மிதந்த போது எந்த வித எதிர்ர்பார்ப்பும் இன்றி மக்களை காக்க தன்னால் ஆன மட்டும் போராடியது முஸ்லிம் சமூகம்.. ஜாதி சமய வேறுபாடின்றி அனைத்து சமூக மக்களையும் பள்ளிவாசலில் தங்க வைத்து அழகு பார்த்து தனது மனிதநேயத்தை நிரூபித்தது முஸ்லிம் சமூகம்.. முஸ்லிம்களின் இந்த செயல் தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களாலும் மனதார பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது..
மக்கள் எல்லாம் வெள்ளத்தில் மிதந்த போது ஒரு கூட்டம் மக்கள் மக்களை எப்படி எல்லாம் பிரிக்கலாம் என்பதில் தான் குறியாக இருந்தது.. அந்த பார்ப்பனீய கூட்டத்தின் மோசமான அருவருக்கத்தக்க செயல்பாடுகளில் ஒன்று தான் இன்று சகோதரி சுவாதி கொலையில் முஸ்லிம் சமூகத்தை கோர்த்துவிட்டு கொசைப்படுத்தி வருவது..
சகோதரர் கிருஷ்ணசாமி பெ கண்ணன் சென்னை வெள்ளத்தில் முஸ்லிம் சமூகம் தமது உயிரையும் துச்ச்மேன மதித்து போராடியதை பற்றி குறிப்பிடும் பொழுது இனிமேல் தான் முஸ்லிம் சமூகம் கவனமாக இருக்க வேண்டும் . எதிரிகள் முஸ்லிம் சமூகத்தின் மீது பழிபாவத்தை சுமத்த எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று.. அது இன்று நிரூபணமாகிவிட்டது.. எச்ச ராஜாவின் இருந்து , ஒய் ஜீ மகேந்திரனின் இருந்து அனைத்து பார்ப்பனீய கூட்டங்களும் முஸ்லிம் சமூகத்தின் மீது தங்களின் துவேசத்தை விஷமாக கக்குகின்றனர்..
இந்த கேடுகெட்ட கூட்டங்கள் என்ன தான் முயன்றாலும் சகோதர சமூகமாக வாழும் மக்களிடத்தில் இவர்களின் கேடுகெட்ட செயல்பாடுகள் ஒருகாலமும் எடுபடப்போவதில்லை.. இறைவன் நாடினால் பார்ப்பனீயம் இந்த மண்ணில் இருந்து நிட்சயம் ஒரு நாள் தூக்கி வீசப்படும்..

பொறுப்புடன் இருந்து வருகிறோம்....!!


சுவாதி படுகொலையில் காவல்துறை குற்றவாளியை அடையாளம் காணாத சூழலில் இஸ்லாமியரை தொடர்புப்படுத்தி Y.G.மகேந்திரன், SV சேகர் உள்ளிட்ட பிராமணர்களும், தமிழ்நாடு பிராமணர் சங்கமும், பாரதிய ஜனதா கட்சியிலுள்ள பிராமணர்களும் அவதூறு பரப்பி அதற்கு தக்க பதிலடிகளை நாம் கொடுத்தாலும் அவதூறு பரப்பியவர்களுக்கு தான் பதிலடி கொடுத்து வருகிறோமே தவிர பிராமண சமூகத்தை நாம் எந்த இடத்திலும் கொச்சைப்படுத்தி விடவில்லை,
இந்த விசயத்தில் முகநூல் முஸ்லிம் மீடியா மிகுந்த பொறுப்புடனே இருந்து வருகிறது.
ஏனென்றால் மனித சமூகத்தை மனித சமூகமாக தான் பார்க்க வேண்டுமே தவிர சாதிய ரீதியாக ஒருபோதும் பார்க்கக்கூடாது. இதை தான் நமக்கு இஸ்லாம் தெளிவாக போதிக்கிறது.
நம்முடைய பதிலடிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சம்மட்டி அடியாய் இருக்க வேண்டுமே தவிர சம்பந்தப்பட்டவர்களின் சமூகத்தை தாக்குவதுபோல் இருந்து விடக்கூடாது.
இதில் ஏனைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பிராமணர்களால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதே பாணியில் பதிலுக்கு நடந்தாலும் முஸ்லிம்களாகிய நாம் கவனத்துடனே இருக்க வேண்டும்.
RSS ஐ உருவாக்கிய 5 டாக்டர்களும் பிராமணர்கள், RSS ன் தலைவர்கள் இன்று வரை பிராமணர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள் பிராமணர்கள், முஸ்லிம்களை கொன்று குவித்தவர்கள் பிராமணர்கள்.
அதேசமயம் மாலேகானில் குண்டுவைத்து அப்பாவிகளை கொன்றது முஸ்லிம்கள் அல்ல, RSS தான் குண்டு வைத்தது என்று RSS தீவிரவாத இயக்கத்தை இந்தியாவிற்கே வெளிச்சம் போட்டு காட்டிய உயர்திரு ஹேமந்த் கர்கரே பிராமணர்,
முஸ்லிம் சமுதாயம் கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளனர், அவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டுமென்று அறிக்கை தாக்கல் செய்த நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா பிராமணர்,
இந்த பதிவின் படத்தில் இஃப்தாருக்கு உணவு கொடுக்கும் நபரும் பிராமணர்,
இப்படி நல்லவர்களும் இருக்கிறார்கள், இந்தியாவை இரத்த ஆறாக ஓட்ட துடிக்கும் அயோக்கியர்களும் இருக்கிறார்கள்.
நல்லவர்களை நல்லவர்களாக அடையாளப்படுத்துவோம், அயோக்கியர்களை அயோக்கியர்களாக அடையாளப்படுத்துவோம்.
சமூகம் சார்ந்த விசயங்களில் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்வோம்.

‪#‎_சுவாதி_கொலை_வழக்கில்_மதச்சாயம்_பூச_நினைப்பது_வன்மையாக_கண்டிக்கத்தக்கது‬‪#‎_பாப்புலர்_ஃப்ரண்ட்_கடும்_கண்டனம்‬!!!


சகோதரி சுவாதியின் படுகொலை இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருகிறது.
பட்ட பகலில் பல்வேறு நபர்களுக்கு மத்தியில் கொடூரமாக நடந்துள்ள படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொலையாளி யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.
அதே வேளையில் இச்சம்பவத்திற்கு சிலர் மத சாயம் பூச நினைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக அரசியல் ஆதாயம் தேடும் சிலரால் இதுபோன்ற பொய் பிரச்சாரங்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
கடந்த வருடம் ஆம்பூரில் காவல் துறையால் அடித்து கொல்லப்பட்ட ஒரு முஸ்லிம் இளைங்கனின் சம்பவத்தின் பின்னனியில் இதுபோன்று பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு இறுதியில் அது பொய் என நிரூபணம் ஆனது குறிப்பிடத்தக்கது.
எனவே இதுபோன்ற வழக்குகளில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் முன் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலமே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க முடியும்.
தமிழக காவல்துறை செய்யுமா?
பொருத்திருந்து பார்ப்போம்...
- ஜெ. முகம்மது ரசின்.
மாநில செயலாளர்
பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு

இது சறியா தவறா?

புதன், 29 ஜூன், 2016

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை திரும்பிவராமல் போகட்டும்.
இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்: 734. அத்தியாயம்: தொழுகை)

பெண்களின் கர்ப்பப்பையை வலுவாக்கும் உளுந்தங்கஞ்சி செய்வது எப்படி?


இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகும் எப்படி இப்படி ஓடுகிறீர்கள்.. உடல் ஆரோக்கியத்தின் ரகசியம் என்ன? ..என்று எப்போதுமே கேட்காதவர்கள் இல்லை.
சிறுவயது முதலே என் ஆச்சியின் கட்டுப்பாட்டில் வளர்ந்ததால் உணவுமுறையில் எப்போதுமே உளுந்துக்கு முக்கியத்துவம் உண்டு எங்கள் வீட்டில்.உளுந்தங்கஞ்சி,உளுந்தங்களி இரண்டுமே வாரத்திற்கு இரண்டுமுறை உண்டு.
சுங்காத(சுருங்காத) தோலும்,மங்காத கண்களும்,பெருக்காத இடுப்பும்,தேயாத எலும்புகளும் கிடைக்க வேண்டுமென்றால் இதை சாப்பிடு என்பாள் ஆச்சி.அழகும் ஆரோக்கியமும் முக்கியம் என்று அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருப்பாள்.என்னுடைய உடல் ஆரோக்கியத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்று.இதன் செய்முறையை பல பேர் கேட்டுக் கொண்டே இருந்ததனால் இந்தப் பதிவு.
இதன் பலன்கள்:
முக்கியமாக விளையாட்டு வீரர்கள்.ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம். முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது. மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.பெண்களுக்கு கர்ப்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தங்கஞ்சி
தேவையான பொருட்கள் :
உளுந்தம்பருப்பு – ஒரு டம்ளர்( கருப்பு உளுந்து நல்லது)
பச்சரிசி – அரை டம்ளர்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
பூண்டு – 20 பல்லு
வெல்லம் அல்லது கருப்பட்டி – இனிப்புக்கு ஏற்றது போல்
தேங்காய்- ஒரு மூடி
செய்முறை:
உளுந்தம்பருப்பு,பச்சரிசி,வெந்தயம்,உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும். (குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்துதான் வைக்க வேண்டும்.அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம்.மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்.) இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ளவேண்டும்.தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு,தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம். (சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்துவிடலாம்.செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)

சுவாதி படுகொலைக்கு லவ் ஜிஹாத் காரணம் - S.V.சேகர் முகநூலில் விஷமப்பிரச்சாரம்...

சுவாதி படுகொலைக்கு லவ் ஜிஹாத் காரணம் - S.V.சேகர் முகநூலில் விஷமப்பிரச்சாரம்...
சுவாதி படுகொலைக்கு பிலால் மாலிக் காரணம் - Y.G.மகேந்திரன், மனோபாலா...
இந்தியாவில் மதக்கலவரத்தை தூண்டும் நடிகர்கள்...
சட்டம் ஒழுங்கை காக்கும்
காவல்துறை மதக்கலவரத்தை தூண்டும் நடிகர்களை உடனே கைது செய்ய வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டியவை எவை..? கூடாதவை எவை..?

சமூக வலைத்தளங்களில் செய்ய வேண்டியவை எவை..? கூடாதவை எவை..? தேவைப்பட்டால் எப்படி, யாரிடம் புகார் அளிப்பது..? பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம்...

இங்கே காவிகளின் விதை ஒருபோதும் விதைக்காது.



தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை தனது கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டு அந்த செயலை செய்து இந்தியா முழுவதும் மதக்கலவரங்களை செய்ய நினைத்தான். அன்று மவுண்ட் பேட்டன்,நேரு போன்றவர்கள் அவன் முஸ்லிமல்ல என்று கூறினார்கள்.இன்று சகோதரி சுவாதி கொலைக்கு பிலால் மாலிக் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்துடன் இணைத்து ஒய்.ஜி. மகேந்திரன் பதிவுக்கு இன்றைய பெரியாரின் தொண்டர்கள் பதிவும் போட்டுள்ளார்கள் தங்கள் முகநூலில் நன்றி மணிகண்டன்.
இது தந்தை பெரியார்,பெருந்தலைவர் காமராஜர்,கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் ,பேரறிஞ்சர் அண்ணா போன்றவர்களின் மண்.இங்கே காவிகளின் விதை ஒருபோதும் விதைக்காது.
ஒய்.ஜி. மகேந்திரன் போன்ற சிந்தனையாளர்களுக்கு இது ரமலான் மாதம் ஒவ்வொரு பள்ளிவாசலுக்கு சென்று பாருங்கள் நோன்பு திறக்க காச்சப்படும் கஞ்சி முஸ்லிம்கள் 6:30 மணிக்கு சாப்பிட்டால் முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு 4:30 மணிக்கு கொடுப்பட்டு அவர்கள் சாப்பிடுவார்கள்.அதில் சந்தோசம் கொள்பவர்கள் முஸ்லிம்கள். தான் சாப்பிட்டாலும் பிறருக்கு கொடுத்து சாப்பிடுவது முஸ்லிம்களின் குணம். இதை சென்னை மழையில் உலகமே கண்டது.

மாட்டு சாணம், சிறுநீரை சாப்பிட வைத்த கும்பல்.

மாட்டிறைச்சி கொண்டு சென்ற ரிஸ்வான் மற்றும் முக்தீரை மாட்டு சாணம், சிறுநீரை சாப்பிட வைத்த கும்பல்.

மூக்கடைப்பை சரிசெய்யும் கற்பூரவல்லி !!!


கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலுக்கு பின் பெய்யும் மழையால் சீதோஷண மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சளி, தொண்டை கட்டு, இருமல் போன்றவை வருகிறது. திடீரென உடல் குளிர்வதால் தலைநீர் ஏற்றம், மூக்கடைப்பு, நெஞ்சக சளி, தலைவலி, உடல் வலி ஏற்படுகிறது. இப்பிரச்னைகளை போக்கும் மருத்துவத்தை பார்க்கலாம். மூக்கடைப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி, புதினா, மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும். இதில், 2 கற்பூரவல்லி இலைகள், புதினா, சிறிது மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். பின்னர், ஆவி பிடித்தால் மூக்கடைப்பு சரியாகும். நுரையீரல் தொற்று குறையும். தொண்டை கட்டு, கரகரப்புகான மருந்து தயாரிக்கலாம். மிளகுப்பொடி, ஜாதிகாய் பொடி, தேன். சிறிது ஜாதிக்காய் பொடி, 2 சிட்டிகை மிளகுப் பொடி, இதனுடன் தேன் விட்டு கலந்து சாப்பிடும்போது தொண்டை கட்டு சரியாகும்.
காலை, மாலை சாப்பிட்டுவர இருமல், சளி இல்லாமல் போகும். உடல் சமநிலையை பெறுகிறது. சளி, இருமலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: துளசி, ஜாதிக்காய் பொடி, சுக்குப் பொடி. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர்விட்டு சிறிது துளசி இலைகள், சிறிது சுக்குப்பொடி, ஜாதிக்காய் பொடி சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து குடித்துவர சளி, இருமல் குணமாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது.
இதை பெரியவர்கள் 100 மில்லி அளவுக்கு எடுக்கலாம். இந்த மருந்தால் மூக்கடைப்பு விலகி போகிறது. நெஞ்சு சளி, உடல் வலி, காய்ச்சல் சரியாகிறது. ஜீரண கோளாறுகளுக்கு துளசி மருந்தாகிறது. ஜாதிக்காய் வயிற்று புண், செரிமானத்துக்கு மருந்தாகிறது. சளி, தொண்டை கட்டு பிரச்னையை போக்குகிறது. சுவாச பாதையை சீர்செய்கிறது. நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தூதுவளை, ஆடாதோடை இலைப் பொடி, திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விடவும். இதில் தூதுவளை இலையை போடவும். அரை ஸ்பூன் ஆடா தோடை இலைப் பொடி, கால் ஸ்பூன் திரிகடுகு சூரணம், பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சளி கரையும். தொண்டை வலி சரியாகும். சுவாசபாதையில் ஏற்படும் தொற்று குணமாகும்.
-

ரத்தமூலத்தை குணமாக்கும் பிரண்டை !!!


எலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்கவல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். வீட்டில் எளிதில் வளர்க்க கூடிய பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. கொழுப்பு சத்தை கரைப்பதுடன் ஒவ்வாமைக்கு மருந்தாகிறது. பிரண்டையை பயன்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பிரண்டை பொடி, பனங்கற்கண்டு, பால். பிரண்டை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சுண்ணாம்பு தெளிவுநீரில் பிரண்டை துண்டுகளை ஊறவைத்து காயவைத்து பொடி செய்யலாம். அரை ஸ்பூன் பிரண்டை பொடியுடன், சிறிது பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிப்பதால் எலும்புகள் பலப்படும். எலும்பு முறிவு இருக்கும்போது இதை எடுத்து கொண்டால் வலி குறையும். பிரண்டையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. கால்சியம் சத்தை உடைய இது, ஈறுகளில் ரத்தம் கசிவை சரிசெய்யும்.
பிரண்டையை பயன்படுத்தி ரத்த மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை துண்டுகள், மிளகு பொடி, சுக்கு பொடி, நெய். பிரண்டையின் நாரை நீக்கிவிட்டு சதைப் பகுதியை எடுக்கவும். இதை புளி தண்ணீரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பாத்திரத்தில் சிறிது நெய் விட்டு, ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். இதனுடன் சுக்கு பொடி, மிளகுப் பொடி சேர்க்கவும். இதை பசையாக அரைத்து கொட்டை பாக்கு அளவுக்கு காலை, மாலை என 8 நாட்கள் சாப்பிட்டுவர ரத்த மூலம் சரியாகும். ஆசனவாயில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
மலைப் பகுதியில், வயல் வெளியில் படர்ந்து காணப்படும் பிரண்டை, ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. புண்களை ஆற்றும். பிரண்டையை பயன்படுத்தி சுவையின்மை, வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பிரண்டை துண்டுகள், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு, புளி, இஞ்சி, நல்லெண்ணெய்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் உளுந்தம் பருப்பு சேர்க்கவும். பூண்டு, வரமிளகாய், இஞ்சி துண்டு, சிறிது புளி சேர்த்து வதக்கவும். புளி தண்ணியில் ஊறவைத்த பிரண்டை துண்டுகளை போடவும். நன்றாக வதக்கவும். ஆறவைத்து சட்னி போன்று அறைத்து தாளிக்கவும். இது வாயு பிடிப்பை குணமாக்குவதுடன், கைகால் குடைச்சலை சரிசெய்கிறது. பிரண்டையானது உள் உறுப்புகள், எலும்புகளை பலப்படுத்துகிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை நிலைநிறுத்துகிறது.
-

காணவில்லை...


அவசியம் பகிரவும் சகோதரர்கிடைக்க உதவி புரியவும்..
பெயர்.. சலாவுதின்.
தகப்பனார் பெயர். ஹாஜாமைதீன்.
ஊர். அத்திக்கடை திருவாரூர் மாவட்டம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அருகிலுள்ள ஊர் பொதக்குடி பிஸ்மி பிராய்லர் கோழிகடைக்கு வேலைக்கு சென்றவர்.26/6/2016 காலை சென்றவர் இன்றுவரை வீடு திரும்பவில்லை.,...
தாங்கள் பகுதியில் கண்டால் உடனே தொடர்புகொள்ளவும்.
தொடர்புக்கு.
ஷாஜகான்,....
8760296688
சலிம்.
9655738760

Hadis

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிகவும்‪#‎நற்குணம்‬ வாய்ந்தவர்களாய் இருந்தார்கள். எனக்கு (என் தாய் வழியில்) "அபூஉமைர்" எனப்படும் ஒரு சகோதரர் இருந்தார். அவர் பால்குடி மறந்தவராக இருந்தார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தால் என் சகோதரரைப் பார்த்து, "அபூஉமைர்! பாடும் (உனது) சின்னக் குருவி என்ன செய்கிறது?" என்று கேட்பார்கள். என் சகோதரர் அந்தக் குருவியை வைத்து விளையாடிக்கொண்டிருப்பார்.
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியது.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம்: 4348. அத்தியாயம்: நற்பண்புகள்)

சுவாதி கொலை : சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பதற்றம்!


‪#‎வதந்தியை_பரப்பும்_கூத்தாடியும்‬...
‪#‎காவி_கயவர்களும்‬...

சுவாதி கொலை குற்றவாளி தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகள் காரணமாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இளம்பெண் கொலை தொடர்பாக கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சம்பவ இடத்தில் இருந்த யாருமே இளம்பெண்ணை காக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சாதி, மத, இன பேதங்களை கடந்து பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் இத்தகைய வன்கொடுமைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை முறையாக பொருத்தாதது ஏன்? பொருத்தப்பட்ட கேமராக்கள் செயல்படாதது ஏன்? கேமராக்களை பொருத்துவது மட்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பெண்களுக்கு பாதுகாப்பை அளித்துவிடுமா என சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஸ்வாதியை கொலை செய்தவராக இருக்கலாம் என்று வெளியிடப்பட்ட இரு சிசிடிவி கேமரா பதிவுகளிலும் இடம் பெற்றவர் யார் என்ற கேள்விக்கு இதுவரை காவல்துறை வசம் எவ்விதமான ஊர்ஜிதமான பதிலும் இல்லை. சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை கடந்து காவல்துறை வசமுள்ள அதிகபட்சமான பதில் என்பது, அப்பெண்ணுக்கு தெரிந்த யாரோ ஒருவராக இருக்கக் கூடும் என்பது மட்டுமே.
இந்நிலையில், எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் பெயருடன் இணைத்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதேபோன்ற கருத்துகளை பிரபலங்கள் சிலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இக்கருத்துகளை உறுதிபடுத்தாமல் அவர்களை பின் தொடரும் சிலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
ஸ்வாதி கொலையில் குற்றவாளி யார் என்று காவல்துறை இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
எமது பதிவு
குறிப்பு - குறிப்பிட்ட சமுகம் என்பது முஸ்லிம்களை தான் என்பதை இவர்களின் கேவலமான பதிவுகளிலிருந்து வெளிப்படையாக தெரிகிறது..இந்த சகோதரியை கொலை செய்த கொடுரனின் விபரம் ஏதும் அறியாமல் எந்த தக்க ஆதாரமும் இன்றி இந்த அரசியல் சாக்கடை பன்றிகளும்,கூத்தாடியும்,காவி கயவர்களும் வதந்தியை பரப்புகின்றனர்....இவர்களும் சமுகத்தில் மதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்...
இவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல..மாறாக மிதிக்கப்பட வேண்டியவர்கள்...

முஸ்லிம்களை வீடு புகுந்து தாக்கும் போக்கு அதிகரிப்பு:

முஸ்லிம்களை வீடு புகுந்து தாக்கும் போக்கு அதிகரிப்பு:
'தாத்ரி'யை தொடர்ந்து டெல்லியில் தாக்கப்பட்டுள்ள தஸ்லீமுத்தீன் குடும்பம்..!
50-60 பேர் கொண்ட 'வன்முறை' கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து அட்டகாசம்..!!
New Delhi: The recent incident in Delhi capital has again proved that Muslims are not safe in the country.
According to information available, the incident happened on Wednesday after local goons entered the house of a Muslim family, assaulted them and vandalized their household goods.
The victim, Taslimuddin from Katihar district of Bihar migrated with his wife and children to Delhi. Taslimuddin meets his family needs by selling the tea.
At around 7:30 pm Wednesday evening, when they were doing their Iftar, 3-4 people continue to knocked the door of his son-in-law, Muhammad Rafidul and abuse them but his wife refused to open the door.
Delhi-Katihar-
After receiving no answer from inside the house, they went away and after a while came back with a crowd of 50-60 people, all of whom were carrying iron rods, pole and and other articles to damage the goods. Within no time, the mob gain entry into the house and allegedly attacked Mohammed Taslimuddin, his wife Asiya, Shahnaz Khatun, daughter, son Ashfaq and injured them.
Police delayed in registering FIR unless the incident came into light through media.
According to the victim’s family, this is not the first time that a Muslim family living in the area has been beaten. Prior to them, they were enough attacking on Muslims and the culprits easily escape with no legal proceedings.
After the incident, the panic family of the Taslimuddin does not understand where you go and whom to approach.

இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A) மற்றும் 295(A) கீழாக வழக்கு தொடர முடியும்.

காவல் துறையோ அல்லது வேறு எந்த அரசு அதிகாரியோ குற்றவாளியின் பெயரை வெளியிடாத நிலையில், இந்த Vinoth Hinthu Nationalist எனும் பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர் கொலை செய்தவர் பெயர் பிலால் அகமது என்கிறார். இன்னொரு இந்து இணையம் வெறும் பிலால் என்கிறது. இவர்களின் நோக்கம் இந்த கொலையாளியை இஸ்லாமியர் என்று அடையாளம் செய்து இங்கே ஒரு மதக்கலவரத்தை உருவாக்குவதாகத் தான் இருக்கிறது.
இவர் மீது இந்திய தண்டனை சட்டம் 153(A) மற்றும் 295(A) கீழாக வழக்கு தொடர முடியும்.. பார்ப்பனியம் நமக்கு சாதகமான விசயங்கள் நடக்கும் பொழுது நேர விரயம், பணம் செலவு என்று பார்க்காமல் இந்திய நீதிமன்ற படியேறி நமக்காக இயற்றப்பட்ட சட்டங்களை தடை செய்வான். ஆனால் நாம் இது வரை அவ்வாறு எதுவும் செய்வதில்லை, எனக்கு தெரிந்து ரங்கராஜ் பாண்டே மீது ஒரே ஒரு வழக்கு இருக்கிறது, ஆனால் பார்ர்பனியம் நம் விசயம் எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும். தமிழர் கடற்கரையான மெரினா பீச்சை அரசியல் கூட்டங்களுக்கு பயன்படுத்த கூடாது என்று தடை வாங்கி வைத்துள்ளார்கள். முல்லை பெரியார் ஊர்வலம் போனதற்காக 15 பேருக்கும் மேலானவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது..
இவர் மீது சட்டப்படி தமிழ்நாடு முழுவதும் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இவர் திருச்செந்தூரைச் சேர்ந்தவர். வேறு விவரங்கள் இல்லை, தோழர்கள் இவர் மீது வழக்குகளை பதிந்து இனி இவர் நீதிமன்றத்திற்கும் காவல்நிலையத்திற்கும் அலைய வேண்டிய நிலையை மட்டும் ஏற்படுத்த வேண்டும்.
ஹரி ஹரன் 

உத்தரவாதம் தந்தால் நிச்சயம் இந்நிலை மாறும்...

ஸ்வாதிக்கு யாரும் உதவி செய்யலைன்னு சுலபமா சொல்லிட்டு போயிடுறாங்க ஆனா உதவி செய்யுறவங்களுக்கு இந்த அரசு எந்தவிதமான நெருக்கடிகளை கொடுக்குதுன்னு என்னோட அனுபவத்த சொல்லுறேன் கேளுங்க..
நான் பத்தாம் வகுப்பு தனித் தேர்வராக எழுதுவதற்கு DPI அலுவலகத்திற்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுப்பதற்கான கடைசி நாள் விண்ணப்பம் கொடுப்பதற்காக ரயிலில் சென்றுகொண்டிருந்தேன்.. அப்பொழுது நான் சென்ற ரயிலில் தொங்கிக்கொண்டு வந்த ஒருவர் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தை தாண்டிய கொஞ்ச தூரத்தில் விழுதுவிட்டார். யாராலோ ரயில் சங்கிலி இழுக்கப்பட்டு ரயில் நிறுத்தப்பட்டது. விழுந்தவருக்கு கடுமையான காயம் உடல் சேதம் என்றாலும் உயிர் இருந்தது.
பின் அதே ரயிலில் வந்த லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் நானும் அந்த உடலை எடுத்து ரயில் பெட்டியில் வைத்தோம். மாணவர்கள் நுங்கம்பாக்கம் வந்ததும் இறங்கிவிட்டனர். நான் எழும்பூர் வரை அதே ரயிலில் விழுதவருடன் வந்தேன் இடையிலேயே உயிர் பிரிந்துவிட்டது பின் எழும்பூர் வந்தது அந்த உடலை ரயில் நிலைய துப்புரவு தொழிலாளிகள் உதவியுடன் ஸ்டெச்சரில் ஏற்றி நடை மேடையில் வைத்தோம் . இதற்குள் நான் போட்டிருந்த சட்டை முழுதும் ரத்தமாகிவிட்டது..
பின் அங்கிருந்து கிளம்ப எத்தனித்த பொழுது தான் ஏண்டா இதை செய்தோம் என்று என்னும் அளவிற்கு ஒரு துயரம் எனக்கு நடந்தது. அங்கிருந்த ரயில்வே காவலர்கள் என்னை பிடித்துக்கொண்டு விசாரணை என்ற ரயில் நிலையத்திலேயே ஒரு அறைக்கு அழைத்து சென்று உயிரை வாங்கிவிட்டனர். செத்தவன் உனக்கு தெரிஞ்சவனா. நீ வந்த ரயில் பெட்டியில் இருந்து தான் விழுந்தானா. தானாக விழுந்தானா இல்லை யாராவது தள்ளிவிட்டார்களா. உன்னுடன் இந்த உடலை ரயில் ஏற்றிய மற்றவர்கள் எங்கே. இந்த உடலில் ஏதாவது நகை இருந்ததா போன்று கேள்வி கேட்டு கிட்டத்தட்ட 2 மணி நேரம் அதே அலுவலகத்திலேயே உக்கார வைத்துவிட்டனர்.
அன்று வேறு விண்ணப்பம் தருவதற்கு கடைசி நாள். நான் அதை சொல்லிய பொழுதும் என்னை விடவில்லை இன்ஸ்பெக்டர் வரும்வரை காத்திரு என்று சொல்லிவிட்டனர்..
அப்புறம் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்த இன்ஸ்பெக்டர். அங்கிருந்த அனைத்து காவலர்களையும் சின்னப்பையன போயி பிடிச்சி வைச்சிருக்கீங்கலேன்னு கேவலமாக திட்டினார். அவரிடம் சார் இன்னைக்கு விண்ணப்பம் தருவதற்கு கடைசி நாள் இவங்களால ரொம்ப லேட் ஆகிடுச்சி நான் இந்த வருஷம் பரிட்ச்சை எழுதலைனா எங்க வீட்ல திட்டுவாங்க சார்னு பொலம்பினேன். நீ கவலை படாத தம்பின்னு என்ன அவர் பைக்லையே கூட்டிகிட்டு போயி DPIல விண்ணப்பம் அவரே பூர்த்தி செய்து கொடுத்து பின் மீண்டும் ரயில் ஏத்தி விட்டுட்டு . மன்னிச்சிடு தம்பின்னு சொல்லி அனுப்பி வைச்சாரு..
ஒருவேளை அந்த இன்ஸ்பெக்டர் மோசமான ஆளா இருந்திருந்தா என் நிலைமை என்ன ஆகியிருக்குமோ..
அரசு உதவி செய்பவர்களுக்கு இது போன்ற தொடர்ச்சியான பிரச்சனைகளை தருவதால் தான் உதவ வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட ஒதுங்கி போகிறார்கள்.
உதவி செய்பவர்களுக்கு அரசு இது போன்று நடக்காது என்று உத்தரவாதம் தந்தால் நிச்சயம் இந்நிலை மாறும்...

Y.G.மகேந்திரனையும், மனோபாலாவையும் கைது செய்ய வேண்டும்.....!!


மும்பையில் பால்தாக்கரே உயிரிழந்தவுடன் சிவசேனா கட்சியினர் கடைகளை அடைக்க சொல்லி வியாபாரிகளை மிரட்டினார்கள்.
அப்போது ஒரு முஸ்லிம் மாணவி தனது முகநூலில்...
நாட்டில் எத்தனையோ பேர் தினமும் பிறக்கிறார்கள், தினமும் இறக்கிறார்கள் அதற்கெல்லாம் கடைகளை அடைக்க சொல்வது முறையா என்று தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.
அவரது பதிவுக்கு அவரது இந்து தோழி ஒருவர் Like செய்திருந்தார்.
இதனால் ஆத்திரம் கொண்ட சிவசேனா கட்சியினர் முஸ்லிம் மாணவியின் உறவினரின் கிளினிக்கை அடித்து நொறுக்கினர்,
முஸ்லிம் மாணவியும், இந்து மாணவியும் கைது செய்யப்பட்டனர்.
சமூக வலைதளத்தின் மூலம் தனது கருத்தை சொன்ன மாணவிகள் கைது செய்யப்பட்டனர்.
ஆனால் இங்கோ இந்து முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக நாட்டில் மதக்கலரவத்தை தூண்டியுள்ள Y.G.மகேந்திரனையும், அவரது பதிவை நீ சரியாக தான் சொல்லியுள்ளாய் என்று மதக்கலவரத்தை தூண்டிய மனோபாலாவையும் காவல்துறை கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பது தமிழக மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.
தமிழக காவல்துறை உடனடியாக Y.G.மகேந்திரனையும், மனோபாலாவையும் கைது செய்ய வேண்டும்.

வாடகை இருப்பவர்களின் கவனத்திற்கு .,


வாடகை ஒப்பந்தம் .,
முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம். ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும். அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.
வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் தெரிவிக்க



மென்பொறியாளர் சுவாதி படுகொலை சம்பவம்..
காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரைப் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டிய எண்களின் விபரம்
:-

ஜகாத் ஓர் நினைவூட்டு


இதீகாப் என்றால் என்ன


நலம் தரும் ஜாதிக்காய்


முகத்தை அழகாக்கும்:
ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும்; முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
அம்மை கொப்புளங்கள் சரியாகும்:
அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.
தசைப்பிடிப்பை நீக்கும்:
ஜாதிக்காயின் விதை வாந்தியை தடுக்கக் கூடியது. ஜீரணத்தை தூண்டவல்லது. தசை வலியினைப் போக்குகிறது. விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூட்டுவலி பக்கவாதம் ஆகியவற்றிற்கு பயன்படுகிறது. காலரா நோயின் பொழுது ஏற்படும் தசைப்பிடிப்பு வலியினை போக்க மேல் பூச்சாக உதவுகிறது. இதனுடைய வடிநீர் காலரா நோயாளிகளின் தண்ணீர் தாகத்தினைச் சரிப்படுத்தும். ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
ஜாதிக்காயின் விதைகளின் மேல் சூழ்ந்துள்ள சிவப்பு நிற திசு ஜாதிபத்ரி எனப்படுகிறது. ஜாதிக்காய் மற்றும் ஜாதிபத்ரி வயிற்றுப் போக்கு, உப்புசம், குடல்வலி, ஆகியவற்றினை போக்க உதவுகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வயிறு உப்புசம் ஏற்படாமல் இருக்க ஜாதிக்காய் விதையை அரைத்து குடிக்க கொடுப்பார்கள். ஜாதிக்காய், சுக்கு மற்றும் ஓமம் மூன்றின் பொடி ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாகும்.

சிறுநீரக கற்களை கரைக்கும் நெரிஞ்சில்..!


ஈரலை பலப்படுத்த கூடியதும், வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கவல்லதும், உயிரணுக்களை அதிகரிக்க செய்வதும், சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டதுமான நெறிஞ்சில் தரையோடு படர்ந்து காணப்படும் செடி நெறிஞ்சில். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். முட்கள் சிறிதாக இருக்கும்.
சிறு நெறிஞ்சில், பெரு நெறிஞ்சில், யானை நெறிஞ்சில் என 3 வகைப்படும். இவைகள் அனைத்தும் ஒரே மருத்துவ குணங்களை கொண்டவை. சிறுநீரகம், பித்தபையில் கற்கள் ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நெறிஞ்சில் மருந்தாக விளங்குகிறது. நெறிஞ்சில் உள் உறுப்புகளுக்கு பலம் தருகிறது. அழற்சியை போக்க கூடியது.
ஈரலை பலப்படுத்தும் தன்மை கொண்டது. நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். சிறு நெறிஞ்சில் செடியை துண்டுகளாக்கி சுத்தப்படுத்தி எடுத்து கொள்ளவும். இதனுடன் சிறிது வெட்டி வேர், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர சிறுநீரக, பித்தப்பை கற்கள் கரைந்து வெளியேறும். கற்கள் வராமல் தடுக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் சரியாகும். வெள்ளைப்போக்கு பிரச்னை குணமாகும்.
நெறிஞ்சில் செடியின் பொடி மற்றும் நெறிஞ்சில் முள் ஆகியவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். நெறிஞ்சில் முள்ளை பயன்படுத்தி ஆண் மலட்டு தன்மையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெறிஞ்சில் முள் பொடியுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடிக்கவும்.
இது, ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாட்டை நீக்குகிறது. உயிரணு குறைபாடுள்ளவர்கள் 3 மாதம் தொடர்ந்து எடுத்துவர உயிரணு அதிகரிக்கும். உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது. நெறிஞ்சிலை பயன்படுத்தி வெள்ளைபோக்கு பிரச்னையை தீர்க்கும் மருந்து தயாரிக்கலாம். நெறிஞ்சிலை பசையாக அரைத்து, அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.
இதனுடன் புளிப்பில்லாத கெட்டித் தயிர் 2 ஸ்பூன் சேர்த்து கலந்து காலையில் சாப்பிட்டுவர வெள்ளைப்போக்கு சரியாகும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் குணமாகும். உஷ்ணம் சம்மந்தமான பிரச்னைகள் சரியாகும்.உடல் சோர்வை போக்குவதற்கான மருந்து குறித்து பார்க்கலாம். அரை தேக்கரண்டி அளவுக்கு வெந்தயத்தை எடுத்து வறுத்து பொடித்து கொள்ளவும். இதனுடன் தேன் அல்லது பால், இனிப்பு சேர்த்து சாப்பிடும்போது உடல் பலம் பெறுகிறது. இதனால் சோர்வு மறைந்து புத்துணர்வு கிடைக்கிறது.

வித்ரு தொழுகையின் சட்டம் என்ன



வித்ரு தொழுகையின் நேரம் எது

வித்ரு தொழுகை தொழவில்லையென்றால் மற்ற தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாதா
பஜ்ரூ தொழுகையில் குனூத் ஓதலாமா