சனி, 25 ஜூன், 2016

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.
அகத்திக்கீரை சொதி
என்னென்ன தேவை?
அகத்தி கீரை- 1 கட்டு
பெரிய வெங்காயம்- 1
தக்காளி-2
பச்சை மிளகாய்-4
பால் - 1கப்
உப்பு- 1 டீஸ்பூன்
மஞ்சள்பொடி- 1டீஸ்பூன்
கறிவேப்பிலை- தேவையான அளவு
எப்படி செய்வது?
கீரையை நன்கு பிரித்து சுத்தம் செய்து கழுகி கொள்ளவும். அகத்திக்கீரையை காம்பிலிருந்து சீராக உருவிக்கொள்ளவும். பின் உருவிய கீரையை தண்ணீரில் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக மண் தூசி இல்லாமல் அலசிக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளியை நான்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும். நீர் லேசாக சூடானதும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கொதிக்க விடவும்.
அதில் மறக்காமல் உப்பு சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி வெந்ததும் அகத்திக்கீரையை அள்ளி போடுங்கள் மேலும் சிறிது நேரம் கொதிக்கட்டும். கீரை சுலபமாக வெந்ததும் ஐந்து நிமிடத்திற்கு பிறகு பாலை ஊற்றுங்கள். பால் கொதி வந்ததும் கறிவேப்பிலையை உருவிப்போட்டு இறக்கிவிடலாம். அகத்திக்கீரை சொதி தயார். இந்த சொதியை சாதத்துடன் மட்டுமல்லாமல் ஆப்பம், இடியாப்பத்துடனும் சேர்த்து சாப்பிடலாம்