புதன், 29 ஜூன், 2016

சுவாதி கொலை : சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பதற்றம்!


‪#‎வதந்தியை_பரப்பும்_கூத்தாடியும்‬...
‪#‎காவி_கயவர்களும்‬...

சுவாதி கொலை குற்றவாளி தொடர்பாக சமூக வலை தளங்களில் பரவி வரும் வதந்திகள் காரணமாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இளம்பெண் கொலை தொடர்பாக கூர்மையான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் சம்பவ இடத்தில் இருந்த யாருமே இளம்பெண்ணை காக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
சாதி, மத, இன பேதங்களை கடந்து பெண்கள் மீது கட்டவிழ்க்கப்படும் இத்தகைய வன்கொடுமைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்களை முறையாக பொருத்தாதது ஏன்? பொருத்தப்பட்ட கேமராக்கள் செயல்படாதது ஏன்? கேமராக்களை பொருத்துவது மட்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாமல் பெண்களுக்கு பாதுகாப்பை அளித்துவிடுமா என சமூக வலைதளங்களில் பல்வேறு வகையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஸ்வாதியை கொலை செய்தவராக இருக்கலாம் என்று வெளியிடப்பட்ட இரு சிசிடிவி கேமரா பதிவுகளிலும் இடம் பெற்றவர் யார் என்ற கேள்விக்கு இதுவரை காவல்துறை வசம் எவ்விதமான ஊர்ஜிதமான பதிலும் இல்லை. சிசிடிவி கேமராவில் பதிவான உருவத்தை கடந்து காவல்துறை வசமுள்ள அதிகபட்சமான பதில் என்பது, அப்பெண்ணுக்கு தெரிந்த யாரோ ஒருவராக இருக்கக் கூடும் என்பது மட்டுமே.
இந்நிலையில், எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு இளைஞரின் பெயருடன் இணைத்து பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதேபோன்ற கருத்துகளை பிரபலங்கள் சிலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இக்கருத்துகளை உறுதிபடுத்தாமல் அவர்களை பின் தொடரும் சிலரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதனால் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.
ஸ்வாதி கொலையில் குற்றவாளி யார் என்று காவல்துறை இன்னமும் கண்டுபிடிக்காத நிலையில், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் இந்த குற்றச்சாட்டு சமூக வலைதளங்களில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
எமது பதிவு
குறிப்பு - குறிப்பிட்ட சமுகம் என்பது முஸ்லிம்களை தான் என்பதை இவர்களின் கேவலமான பதிவுகளிலிருந்து வெளிப்படையாக தெரிகிறது..இந்த சகோதரியை கொலை செய்த கொடுரனின் விபரம் ஏதும் அறியாமல் எந்த தக்க ஆதாரமும் இன்றி இந்த அரசியல் சாக்கடை பன்றிகளும்,கூத்தாடியும்,காவி கயவர்களும் வதந்தியை பரப்புகின்றனர்....இவர்களும் சமுகத்தில் மதிக்கப்படுபவர்களாகவே இருக்கிறார்கள்...
இவர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல..மாறாக மிதிக்கப்பட வேண்டியவர்கள்...