வெள்ளி, 24 ஜூன், 2016

மோ(ச)டி தர்பார்..!



மோ(ச)டி தர்பார்..!
கல்விக் கடன் பெற்ற மாணவர்களை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் அடிமை படுத்தும் அரசு..!!
தமிழக மாணவர்கள் தங்கள் படிப்பு செலவுக்காக வங்கிகளில் வாங்கிய கடன் தொகையில் 45% இனி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தம்.
அவர்களிடம் தான் திருப்பி செலுத்த வேண்டும். அதாவது அதிக கடன் வைத்துள்ளவன், குறைந்த கடன் வைத்துள்ளவனிடம் கடனை திருப்பி செலுத்த சொல்வது மிகவும் கொடுமையான செயல்.
இந்த கடன் தொகையை வசூலிக்க ஏற்கனவே அடியாள் கூட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் களத்தில் இறக்கி விட்டுள்ளது.
முதல் கட்டமாக அவர்கள் தொலைபேசி மூலம் கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என்று மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
படித்தவுடன் வேலை கிடைக்கும், வேலை கிடைத்தால் சம்பளம் வரும் அதை வைத்து கடனை திருப்பி செலுத்தலாம் என்று கடன் வாங்கிய மாணவர்கள் இன்று படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் மிகவும் குறைவான சம்பளத்தில் கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
வேலைவாய்ப்பை பெருக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் தொழில் துவங்கி இந்தியர்களுக்கு வேலை கொடுக்க சொல்லி கெஞ்சிக்கொண்டு இருக்கின்றன.
கல்விக்கடனை அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியது நிறைவேறுமா என்ற ஏக்கத்தில் இருந்த மாணவர்களுக்கு இந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது.
ஏற்கனவே இது போல ஒரு முயற்சி கேரளாவில் நடைபெற்ற போது கேரள அரசு உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தியது.
அதே போல தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பு.
Source: அரசியல் நையாண்டி