ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவிலிருந்து 103 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில், 100-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.
2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் 83 பேர் பங்கேற்றதே அதிகமானதாக இருந்தது. இதை முறியடித்து இந்த ஒலிம்பிக் போட்டிக்கு 103 பேர் இதுவரை தகுதி பெற்று உள்ளனர். 57 வகையான விளையாட்டு பிரிவில் 56 ஆடவர், 47 மகளிர் என 103 பேர் பங்கேற்க உள்ளனர்.
தடகளத்தைப் பொறுத்தவரையில் 11 மகளிர் உள்பட 23 பேர், 15 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதால் இந்த முறை கூடுதலான பதக்கம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.