ஞாயிறு, 26 ஜூன், 2016

வி.பி.சிங்



ஈழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையை பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசு திரும்பி வரச் செய்தது. இது தொடர்பாக ஒரு நிருபர், “விடுதலைப்புலிகள் இயக்கத்தை நீங்கள் பயங்கரவாத இயக்கமாகக் கருதவில்லையா?” எனக் கேட்டார். அதற்கு வி.பி.சிங், “எந்த ஒரு இயக்கத்திற்கும் முத்திரை குத்துவதற்கான ரப்பர் ஸ்டாம்ப் எதுவும் எனது சட்டைப் பைக்குள் இல்லை” என்றார் பளிச்சென.
இன்னொரு நிருபர் அவரிடம், “எங்கே பேசினாலும் சமூக நீதி, சமூக நீதி என்பதை மட்டும் தொடர்ந்து பேசி வருகிறீர்களே, உங்களுக்கு வேறு எந்தப் பிரச்சினையும் தெரியாதா?” என்றார். வி.பி.சிங் ரொம்பவும் இயல்பாக, “நண்பரே.. எல்லா இடத்திலும் நான் சமூக நீதி பற்றிப் பேசுகிறேன் என்றால் அந்த இடத்துக்கெல்லாம் நீங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்று நான் கட்டாயப்படுத்தவில்லையே” என்று நிருபரின் வாயை அடைத்தார்.
மேல்சாதி, அதிகாரவர்க்கம், ஊடகம் இவையெல்லாம் தொடர்ந்து சதி செய்தபோதும் அதை மீறி மண்டல் கமிஷனின் அறிக்கையை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் உறுதியாக இருந்து அதற்காக தனது ஆட்சியை இழக்க நேரிட்டபோதும் 27% இடஒதுக்கீட்டை இந்தியாவில் நடைமுறைப்படுத்தக் காரணமாக இருந்தவர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங்.
(பிறந்தநாள் -ஜூன் 25)