இந்துத்தவவாதிகள் முஸ்லிம்களற்ற இந்தியாவை உருவாக்குவோம் என்ற கோஷங்களை சமீபகாலமாக அதிகப்படியாக உச்சரித்து வருகின்றனர். இது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார்.
இது குறித்து அவ்ரங்காபாத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்தில் கலந்து கொண்ட அவர் கூறுகையில், “இத்தகைய கோஷங்கள் பொறுத்துக் கொள்ளப்படாது” என்றும் “இந்த நாடு யாருடைய அப்பன் வீட்டு சொத்தல்ல” என்றும் கூறியுள்ளார்.
மேலும் இது போல கருத்துக்களை தெரிவிக்கும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மனநல காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியா எல்லா மத நம்பிக்கை உடையவர்களுக்கும் சொந்தமான நாடு என்றும் நாட்டிற்குள் பிரிவினையை உண்டு பண்ண நினைப்பவர்கள் அடிப்படையற்ற விஷயங்கள் மூலம் பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். இவர்கள் இத்தகைய கருத்துக்கள் மூலம் மக்களை வழிகெடுக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.