சனி, 25 ஜூன், 2016

பிர்அவ்ன் விடயத்தில் மூக்குடைந்த


எந்தவொரு கருத்து சொல்லப்பட்டாலும் அதை ஆய்வு செய்து சரி தவறை அறிவதற்கு முற்படாமல், அதை சொன்ன நபர் யார், அவர் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவரா? அப்படியானால், சகட்டு மேனிக்கு அவரை விமர்சிக்க வேண்டும்..
என்கிற குறுகிய மனப்போங்கு பலரிடம் காணப்படுகிறது.
அத்தகைய குறுக்குச் சிந்தனை கொண்டோருக்கான உதாரணம் தான், ஃபிர் அவ்ன் தொடர்பாக சகோ. செய்யத் இப்ராஹிம் அவர்களை விமர்சிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் கூட்டமும்.
ஃபிர்அவ்ன் இன்று வரைக்கும் இறக்காமல் உயிருடன் இருக்கிறான் என்று செய்யத் இப்ராஹிம் சொல்லி விட்டார் என்ற‌ அண்டப் புளுகை பரப்பி திரிகிறது இந்த கூட்டம்.
எங்கே சொன்னார்? எப்போது சொன்னார்? அதற்கான ஆதாரம் என்ன? என்றெல்லாம் இதை பரப்புகிறவனும் தேட மாட்டான்.
அப்படி பரப்பப்பட்டதை தானும் எடுத்து பரப்பி குளிர் காய நினைக்கும் சில புல்லுருவிகளும் அதை சிந்திக்க மாட்டார்கள்.
மக்கத்து காஃபிர்கள் தேவலாம்..!!
நாசித் அஹ்மத்

Related Posts: