வியாழன், 30 ஜூன், 2016

‪#‎_சுவாதி_கொலை_வழக்கில்_மதச்சாயம்_பூச_நினைப்பது_வன்மையாக_கண்டிக்கத்தக்கது‬‪#‎_பாப்புலர்_ஃப்ரண்ட்_கடும்_கண்டனம்‬!!!


சகோதரி சுவாதியின் படுகொலை இன்று தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருகிறது.
பட்ட பகலில் பல்வேறு நபர்களுக்கு மத்தியில் கொடூரமாக நடந்துள்ள படுகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொலையாளி யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும்.
அதே வேளையில் இச்சம்பவத்திற்கு சிலர் மத சாயம் பூச நினைப்பதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
குறிப்பாக அரசியல் ஆதாயம் தேடும் சிலரால் இதுபோன்ற பொய் பிரச்சாரங்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
கடந்த வருடம் ஆம்பூரில் காவல் துறையால் அடித்து கொல்லப்பட்ட ஒரு முஸ்லிம் இளைங்கனின் சம்பவத்தின் பின்னனியில் இதுபோன்று பொய் பிரச்சாரம் பரப்பப்பட்டு இறுதியில் அது பொய் என நிரூபணம் ஆனது குறிப்பிடத்தக்கது.
எனவே இதுபோன்ற வழக்குகளில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படும் முன் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துகளை பரப்புபவர்கள் மீது தமிழக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் மூலமே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தண்டிக்க முடியும்.
தமிழக காவல்துறை செய்யுமா?
பொருத்திருந்து பார்ப்போம்...
- ஜெ. முகம்மது ரசின்.
மாநில செயலாளர்
பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு