துப்பாக்கியிலிருந்து அரசியல் அதிகாரம் பிறக்கிறதோ இல்லையோ கல்வியிலிருந்துதான்
சமூக அதிகாரம் பிறக்கிறது என்பதை ஆதிக்கசக்திகள் அறிந்திருக்கின்றன.அந்தகல்வியை
தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அவர்கள் கடைப்பிடிக்கும் வழிகள் மூன்று : 1 கல்வி
பரவலை தடுப்பது. 2 ஓர் அந்நியமொழியை திணிப்பது. 3 தங்கள் நலனுக்கு ஏற்ற பாடத்திட்ட
த்தை புகுத்துவது. மோடி அரசு அண்மையில் வெளியிட்டுள்ள "2016 தேசிய கல்வி கொள்கை
வரைவிற்கான சில ஆலோசனைகள்" எனப்பட்டதில் இந்த மூன்றும் துலக்கமாக உள்ளன.
முதலாவதற்கு உதாரணம்: "இடைநிறுத்தம் இல்லா கொள்கை ஐந்தாம்வகுப்புவரை பின்பற்ற
ப்படும்.உயர்தொடக்க வகுப்புகளில் இடைநிறுத்தம் பின்பற்றப்படும்". அதாவது ஐந்தாம்வகுப்பு
தேர்வில் மாணவர் பெயிலானால் அவர் ஆறாம் வகுப்புக்கு செல்ல முடியாது. இது எத்தகைய
தாழ்வுமனப்பான்மையை உருவாக்கும் என்பதை சொல்லவேண்டியதில்லை.அனேகமாக அவர்
படிப்பை அத்தோடு நிறுத்திவிடுவார். அதுதான் மோடிஅரசின் நோக்கமாக உள்ளது. சின்னவய
தில் இவர்கள் வைக்கும் தேர்வில் ஒருவர் தேர்ச்சிபெறாததற்கு அவர்மீது தனிக்கவனம் செலுத்
தப்படாததுதான் காரணமாக இருக்கும். அந்த பள்ளியின் தவறுக்கு மாணவரை தண்டிக்கும்
கொடுமை இது.
இரண்டாவதற்கு உதாரணம்:"இந்திய மொழிகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் சமஸ்கிருதத்
திற்கு உள்ள சிறப்பு முக்கியத்துவத்தையும், நாட்டின் கலாச்சார ஒருமைப்பாட்டிற்கு அது தரும்
தனித்துவமான பங்களிப்பையும் மனதில் கொண்டு பள்ளி மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில்
அதை கற்றுத் தருவதற்கு மிகத் தாராளமான அளவில் வசதிகள் வழங்கப்படும்". ஆர் எஸ் எஸ்
சின் கனவு அப்படியே அரசின் ஆலோசனையாக வெளிப்பட்டுள்ளது! தமிழ் உள்ளிட்ட தென்னிந்
திய மொழிகள் தனி மொழிக் குடும்பத்தை சார்ந்தவை எனும் மொழியியல் உண்மையை இது
மறுக்கிறது. ஒரு மொழியை மட்டும் அரசு தூக்கிப்பிடிப்பது எப்படி ஒற்றுமையை வளர்க்கும்? அது
என்ன "சமஸ்கிருதம் தரும் கலாச்சாரஒற்றமை"? மனு(அ)தர்ம சாஸ்திரம் இந்த துணைகண்டத்து
அரசர்களின் நீதிபரிபாலன முறையாக இருந்ததே, அதை மீண்டும் கொண்டு வருகிற முயற்சி
தானே இது.
மூன்றாவதற்கு உதாரணம் : "அறிவியல் , கணிதம் , ஆங்கிலம் ஆகியவற்றிற்கு தேசிய அளவி
லான பொது பாடத்திட்டம் வடிவமைக்கப்படும். சமூகஅறிவியல் போன்ற பிறவற்றிற்கு ஒருபகுதி
பொதுவானதாகவும் ஒருபகுதி மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் பாடத்திட்டம் அமையும்".
இந்த பரந்த நாட்டின் முழுக்கல்வியையும் மத்தியத்துவப்படுத்தி, அதை தனது ஆசைக்கு ஏற்ப கட்ட
மைக்கிற ஆர் எஸ் எஸ் சின் சதித் திட்டம் இதில் இருக்கிறது.
வரலாறு போன்ற சமூகஅறிவியல் பாடங்களிலும் மத்தியஅரசின் தலையீடு இருக்கும் என்பதன்
பொருள் என்ன? "மாநிலங்களிடம் முழுமையாக விட்டால் மொழிப்போர் தியாகிகள் பற்றியெல்
லாம் தமிழகவரலாற்றில் சேர்ப்பீர்கள்" என்று டி விவிவாதத்தில் பங்கேற்ற ஒரு பாஜககாரர் அவர்
களது திட்டத்தின் நோக்கத்தை போட்டு உடைத்தார். ஆக வரலாறு பாடம் என்பது இனி நடந்த வர
லாறாக இருக்காது, ஆர் எஸ் எஸ் நடத்தும் வரலாறாகவே இருக்கும்! பலதேசிய இனங்களைக்
கொண்ட இந்த நாட்டின் வரலாற்றை ஒற்றையானதாக, தட்டையானதாக திருத்தி எழுத தயாராகி
விட்டது மோடி அரசு. தனது வரலாறை இழக்கும் ஒரு தேசியஇனம் விரைவில் தன்னையே இழந்து
விடும்.
இந்த ஆலோசனைகளை சென்ற மாதம் வெளியிட்டுவிட்டு இந்த மாத இறுதிக்குள்ளேயே கருத்து
சொல்லி முடிக்க வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறது இந்த கேடு கெட்ட ஆட்சி. "தேசிய கல்வி
கொள்கை" என்றபெயரில் வருணாசிரம கல்வி கொள்கையை அவசரஅவசரமாக அரங்கேற்றப்
பார்க்கிறார்கள். தமிழகத்தின் ஜனநாயசக்திகள் தங்களின் கடும் கண்டனத்தை உடன் தெரிவிக்க
வேண்டும் . அப்புறம் அண்ணா பெயரில் கட்சி நடத்தும் ஆட்சிதான் உள்ளது ! அது என்ன செய்யப்
போகிறது?

thanks to
Ramalingam Kathiresan
(https://www.facebook.com/arunan.kathiresan/posts/729396160534543)