புதிய ரேஷன் கார்டுகளை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தீபாவளி முதல் அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது புதிய ரேஷன் கார்டுகளை விண்ணப்பித்து, 60 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், பல மாதங்கள் ஆனாலும் ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துவருகிறது. இதனை கட்டுப்படுத்தவும், விரைவாக ரேஷன் கார்டு பெறவும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறையை தமிழக உணவுத் துறை திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த உள்ளதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. www.tnpds.com என்ற இணையதளத்தில் புதிய ரேஷன்கார்டை விண்ணப்பிக்கலாம். அதில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்து குடும்பத் தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும், கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டு வகை, காஸ் சிலிண்டர் விபரம் குறித்து கேள்விகளும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்யப்பட்டதற்கான அடையாள எண் வரும். இதன்மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை தெரிந்து கொள்ள முடியும்.
பதிவு செய்த நாள் : October 14, 2016 - 11:32 AM