மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறைக்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதற்கு ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது ஜலாலுதீன் உமரி வெளியிட்டுள்ள அறிக்கையில் விவாகரத்து, பலதார மணம், உள்ளிட்ட தனிமனித சட்டங்கள் தங்களது மதத்தின் ஒரு அங்கமாகவே இஸ்லாமியர்கள் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமியர்களின் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு மதிக்கவேண்டும் என்றும் அதற்கு முடிவு கட்ட முயலக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மக்கள் மீது ஒரு பொது சிவில் சட்டத்தை திணிப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பதிவு செய்த நாள் : October 11, 2016 - 09:51 PM
Source: new gen media