புதன், 12 அக்டோபர், 2016

பாஸ்போர்ட் பக்கம் கிழிப்பு நூதன மோசடி! அயல் நாட்டில் இந்தியத் தமிழர்களே கவனம்!


சில இந்திய விமான நிலையங்களில் அதிகாரிகளால் நடத்தப்படும் பாஸ்போர்ட் மோசடி!!
இந்தியாவுக்கு வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வருகை தரும் இந்தியர்களே கவனம்!
இமிக்ரேஷன் , கஸ்டம்ஸ் அதிகாரிகள் துணையோடு நடக்கும் மோசடி இது!
வெளிநாடு செல்லும் நீங்கள் லக்கேஜ் செக்-இன் செய்துவிட்டு இமிக்ரேஷன் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் உங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்கும், இந்தியாவிலிருந்து வெளியேறும் நாள் ஸ்டாம்ப் பதியத் தருகையில் மிகவும் கவனமாக இருக்கவும். பாஸ்போர்ட்டை அதிகாரியிடம் சோதனைக்குத் தந்துவிட்டு வேறுபக்கம் பராக்குப் பார்த்தபடி இருந்தால், தாங்கள் கவனிக்காதபோது கஸ்டம்ஸ், இமிக்கிரேஷன் அதிகாரி (??) அலுவலர் உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தைக் கிழித்து எறிந்துவிட்டு, உங்கள் பாஸ்போர்ட் எண்ணை அபாயகரமானவர்கள் லிஸ்டில் சிகப்பு அபாயக் குறியீட்டுடன் அகில இந்திய ஏர்போர்ட்களுக்கு அபாய அறிவிப்பைச் செய்துவிடுவார்.
பாஸ்போர்ட் ரெனியூவல், பிற நாட்டு தூதரகங்கள், வெளிநாட்டு இந்திய தூதரகத்திலும் இந்த பாஸ்போர்ட் பக்க கிழிப்பால் மிகப்பெரிய அல்லலுக்கு உட்படுவீர்கள்!
உங்கள் பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தைக் கிழிக்கப்பட்டதை அறியாத நீங்கள் அடுத்தமுறை இந்தியா செல்லும் போது, அறியாமையால் விபரம் அறியாமல் உங்களுக்கு விரிக்கப்பட்ட இந்த வலையில் வீழ்ந்து மிகப்பெரிய சட்ட சிக்கலில், கிரிமினல் குற்றத்துக்கு உள்ளாக்கப்படுகின்றீர்கள்!
உங்கள் கல்வி, பார்க்கும் வேலை, அயல்நாட்டில் பெறும் சம்பளம், உங்கள் குடும்ப விபரம் என அனைத்தையும் அறிந்துகொண்டு பெரிய அமவுண்ட் பணம் பேரம் பேசப்படும்!
அநாவசியமாக நீதி நேர்மை என்று கீழ் மட்ட கோர்ட்டுகளுக்கு அலைந்தால் உங்கள் வாழ்வு நாசமாக்கப்படும் அபாயம்! பெரிய கோர்ட்டுகளுக்குச் செல்ல பெரிய வக்கீல், லட்சக்கணக்கில் பணம் என்று பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொள்ள நேரிடும்!
ஹைதராபாத், மும்பாய், என பெரிய நகரங்களில் மாதம் 10-20 பாஸ்போர்ட் பக்கக் கிழிப்பு மோசடி கிரிமினல் வழக்குகளில் தங்கள் தவறு என்ன என்றே தெரியாமல் பலர் மாட்டிக்கொண்டு வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டிருக்கின்றார்கள்!
வெளிநாடுவாழ் இந்தியர்களே, தமிழர்களே இந்த மோசடியைத் தாங்கள் அறிந்த வெளிநாட்டு வாழ் இந்திய, தமிழ் நண்பர்களுக்கு அறியத்தரவும்.
மிகவும் முக்கியமான விஷயமாகப் பட்டதால் சக வெளிநாடுவாழ் இந்திய/தமிழ்ப் பதிவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டி இந்தப்பதிவு!

Related Posts:

  • தமிழகத்தில் இன்று சிங்கத்தின் கர்ஜனை.. மொழியே தெரியாது அந்த மனிதரின் பேச்சை கேட்க திரன்ட தமிழக முஸ்லிம்கள்..... … Read More
  • ஆசியாவின் அக்னிப்பிரவேசம் ஆசியாவின் அக்னிப்பிரவேசம் "‪#‎பாரிஸ்டர்_அஸதுத்தீன்_உவைஸி‬ அவர்களுக்கு தமிழகத்தில் உற்சாக வரவேற்பு...!**-**-**-**-**-**-**-**-**-**-**-**-**-**-… Read More
  • NOTA NOTA -NONE OF THE ABOVE (நோட்டா ) NOTA NOTA -NONE OF THE ABOVE (நோட்டா பட்டம் அனைத்து வாக்கு மிஷின்களிலும் கீழே கடைசியில் இருப்பதால்,மேலே உள்ள அனைத்திற்கும் வாக்கு அளிக்க விருப்பம் இ… Read More
  • வெடி விபத்து. கேரளா - கொல்லம்...அதிர்ச்சியளிக்கும் வெடி விபத்து. நெஞ்சம் பதறும் பயங்கர விபத்தில் சிக்கியுள்ள உறவுகளை காப்பாற்றும்மீட்புப் பணிக்காகவும்… Read More
  • useful for the ladies..! (function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src … Read More