
தகுதியில்லாத பிரதமரால் நாடு ஏராளமான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியிருப்பது குறித்து நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது.
அதற்கு ராகுல் காந்தியின் குற்றசாட்டில் உண்மையுள்ளது என 81.15 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தவறான குற்றசாட்டு என 10.13 சதவீதம் பேரும், அரசியல் லாபத்திற்காக என 8.72 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
இதே கேள்வியை டுவிட்டர் சமூக வலைதளத்தில் கேட்டிருந்தோம். அதற்கு உண்மையுள்ளது என 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அரசியல் லாபத்திற்காக என 35 சதவீதம் பேரும், தவறான குற்றசாட்டு என 26 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.