புதிய 100 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படும் என்று கடந்த மாதம் 8-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்பட்டன. இதற்கிடையே புதிய 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சில மாற்றங்களுடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பழைய 100 ரூபாய் நோட்டுகள் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செவ்வாய், 6 டிசம்பர், 2016
Home »
» வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டுகள்
வருகிறது புதிய 100 ரூபாய் நோட்டுகள்
By Muckanamalaipatti 8:36 PM