பெங்களூருவில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4 கோடியே 70 லட்சம் மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக பெங்களூருவில் மாற்றப்பட்டு வருவதாக வருமான வரித்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூருவில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. ரியல் எஸ்டேட் அதிபருக்குச் சொந்தமான கட்டடத்தில் ரூ. 5 கோடி அதிகமான மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டது. அதில், ரூ.4 கோடியே 70 லட்சம் புதிதாக வெளியிடப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளாகும்.பழைய 500 ரூபாய் நோட்டுகளும், வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல 5 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளும், 6 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
பதிவு செய்த நாள் : December 01, 2016 - 07:20 PM