திங்கள், 19 டிசம்பர், 2016

புதிய கட்டுப்பாடு: ரூ.5,000 மட்டுமே பழைய நோட்டு டெபாசிட் செய்யலாம்

ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு மேலும் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது.
கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையாக மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வரும் மத்திய அரசு தற்போது ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி வரும் 30ம் தேதி வரை ஒரு வங்கிக் கணக்கில் 5 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இந்தக் கட்டுப்பாடு ஏதுமின்றி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தது.
வங்கி அல்லது அரசுக் கருவூலம் தவிர்த்து தனிநபர்கள் வைத்திருக்கும் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஒரு கணக்கில் ஒருவர் 5 ஆயிரம் ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும் என மத்திய அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கிக் கிளைகள், பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மட்டுமின்றி நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகளில் வைத்துள்ள கணக்கிலும் டெபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts: