ஜெயலலிதா கன்னத்தில் எப்படி வந்தன அந்த நான்கு ஓட்டைகள்.?! இந்த படத்தை நன்கு உற்றுப் பாருங்கள் வாய்க்குள் எதையோ திணித்திருப்பது போல தெரிகிறதல்லவா.?!
10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உங்கள் தாத்தாவோ பாட்டியோ கொஞ்சம் கூட வாடாமல் வதங்காமல் இருந்ததை பார்த்திருக்கிறீர்களா.?! பிறகு எப்படி 75 நாட்கள் வீட்டுக்கு கூட வர முடியாத அளவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் இத்தனை தளதளப்பாக இருக்க முடியும்.?!
அவர் புருவத்தைப் பாருங்கள். அவர் சின்ன வயது படங்களை வைத்து பார்க்கும் போது மிகவும் அடர்த்தியான புருவம் உடையவர் என தெரிகிறது. பின் எல்லா நடிகைகள் போல புருவத்தை திருத்தம் செய்யும் பழக்கம் இருந்திருக்கலாம். முதல்வர் ஆன பின்னும் அது தொடர்ந்து தான் இருக்க வேண்டும்.
75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தவருக்கு எப்படி புருவம் வளராமல் இவ்வளவு மெல்லியதாக இருக்க முடியும். அப்படியானால் புருவம் திருத்தப்பட்டதா அல்லது புருவம் இனி வளர்ந்துவிட முடியாத அளவுக்கு பல நாட்களுக்கு முன்பே அவர் உயிர் பிரிந்து விட்டதா.?!
அதே போல அவர் தலைமுடி... 68 வயதான ஒருவருக்கு எப்படி இவ்வளவு கருமையாக...?! டை அடிக்கப்பட்டிருந்தாலும் 75 நாட்களில் அதில் மாற்றங்கள் வராதா.?! அப்படியானால் மீண்டும் டை அடிக்கப்பட்டதா.?! அல்லது வெண்மையடையும் முன்பே அதன் வளர்ச்சி தடுத்து நிறுத்தப்பட்டதா.?!
ஒரே ஒரு தனி மனுஷி, இனி அவரால் ஒன்றும் முடியாது என்ற நிலையில் அவரை முடக்கிவிட்டு ஆட்டம் போட்டது யார்.?! இத்தனை கேள்வி கேட்கும் எதிர்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் இவ்விஷயத்தில் மட்டும் வாய் மூடி இருப்பது ஏன்.?! இந்த சதிகளின் பிண்ணனி என்ன.?!
வற்றாத முகம், இழக்காத பொலிவு, திருத்தப்பட்ட புருவம், டை அடிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தலைமுடி... 75 நாட்கள் யாராலும் அனுக முடியாதவாறு மருத்துவமனையில் இருந்திருக்கும் நிலையில் நிச்சயமாக எப்போதோ இறந்து போய்விட்ட உடலை EMBALMING மூலம் பாதுகாத்தால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியம்...
எம்பாமிங் என்றால் உடலை அப்படியே பாதுகாப்பது... ரத்தம் முழுக்க வெளியேற்றிவிட்டு ரத்தநாளங்களிலும் உள்ளுறுப்புகளிலும் ஃபார்மால்டிஹைடு செலுத்துவதன் மூலம் இதை செய்யலாம். இதற்கு உடலில் ஆங்காங்கே ஓட்டைகள் போட வேண்டும். அப்படியானால் கன்னத்தில் இருக்கும் ஓட்டைகளும் அதற்காகப் போடப்பட்டவை தானா.?!
எம்பாமிங்கின் ஒரு அங்கமாக நகம் வெட்டுவது, முடி திருத்துவது, முகத்துக்கு மேக்கப் எல்லாமே செய்யப்படுகிறது. எம்பாமிங் பெரும் தலைவர்களுக்கு செய்யப்படுவது சகஜம் தான். இளவரசி டயானாவின் உடல் சில நாட்கள் வரை பாதுகாக்க எம்பாமிங் செய்யப்பட்டது.
ஆனால் இரவு 11.30க்கு இறந்து அடுத்த நாள் மாலை அடக்கம் செய்ய எம்பாமிங் எதுக்கு.?! ஜெயலலிதா உடல் எம்பாமிங் செய்யப்பட்டதென்றால் அவர் எப்போது இறந்தார்.?! எப்போதோ இறந்த போன ஒரு உடலை வைத்துக் கொண்டு அளவற்ற நாடகங்கள் நடத்தி இருப்பது ஒரு பாமரனுக்குக் கூட புரிகிறது. ஆனால் ஏன் எந்த மேலிடமும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.?!
ஒரு சொத்து பத்திரப்பதிவு என்றால் ஒரு மாதத்துக்குள் யாராகிலும் அப்ஜெக்ஷன் எழுப்ப வேண்டும். இல்லையெனில் எழுப்ப முடியாது. ஆக அந்த ஒரு மாதம் கடப்பதற்காகவும் சில காலதாமதங்கள் வெகு சாணக்கியத்தனமாக அரங்கேற்றப்பட்டுள்ளதா.?! எந்த உண்மையும் வெளியே தெரியாமல் இருக்கத்தான் ஆளும் காவிகளுடன் கூட்டா.?!...
மோடி ஜெயலலிதா இறப்பு குறித்து ட்வீட் செய்தது 10.09 pmக்கு. ஆனா அப்பல்லோ அறிக்கை அவர் 11.30 pmக்கு இறந்ததாக தெரிவிக்கிறது. இந்த ஒரு விஷயம் போதும் அத்தனை அப்பல்லோ அறிக்கைகளும் உண்மையை சுமந்திருக்கவில்லை என்பதை நிரூபிக்க... இவை எல்லாம் தெரிந்து மனம் நொந்த யாரோ ஒருவர் தான் வெளியில் சொல்ல பயந்து தமிழச்சிக்கு தகவல் தந்திருக்க வேண்டும்...
சொத்துக்களால் உயிரையே இழந்துவிட்டார் ஜெயலலிதா. அவர் ஆணவத்தால் கோபப்பட்டவர்கள் கூட அவர் மறைவின் மர்மத்தை உணர்ந்து அனுதாபப்படுகிறார்கள்... ஒரு முதல்வருக்கே இந்த கதி என்றால் நமக்கு.?! என்ற கேள்வி ஒவ்வொருவரின் உள்ளத்திலும்...
இது ஜனநாயக நாடு என்றால் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும். சொத்துக்கள் என்ன ஆயின, யார் யார் பேரில் மாற்றப்பட்டன என்ற அறிக்கைகளை பொதுவில் சமர்ப்பிக்க வேண்டும். மாஃபியாக்கள் கூண்டோடு கைது செய்யப்பட்டு, அதிகார மையத்தின் இரும்புக்கரத்தால் மருத்துவத்துறையின் நேர்மையும் நசுக்கப்பட்டது போல விசாரணைகள் நசுக்கப்படாமல் பாதுகாக்க வேண்டும்...
ஆனால் இதையெல்லாம் யார் செய்வார்கள்.?!
யாருக்கு அந்த துணிச்சல் இருக்கிறது.?!
யாருக்கு அந்த துணிச்சல் இருக்கிறது.?!
ஜெயலலிதாவின் கன்னத்தில் நான்கு ஓட்டைகள் தான். ஆனால் சட்டத்தில் இருக்கும் நூறாயிரம் ஓட்டைகளை யார் அடைப்பது.?
source : FB சுஹைனா மஜ்ஹர்