எதிர்க்கட்சிகளின் அமளியால் நடக்காத நாடாளுமன்ற கூட்டத்துக்கு உரிய சம்பளத்தை திருப்பித் தருவதாக, பிஜூ ஜனதா தள எம்.பி. பைஜாயந்த் ஜெய் பாண்டா அறிவித்திருக்கிறார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகளின் அமளியில் முக்கிய மசோதாக்கள் நிறைவேறாமல் முடங்கியது. இந்த சூழலில், நாடாளுமன்றம் முடக்கப்பட்ட நேரத்துக்கு அளவாக தனது ஊதியத்தை திரும்ப தந்துவிடுவதாக, பிஜூ ஜனதா தள எம்.பி., பைஜாயந்த் ஜெய் பாண்டா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அவரது டுவிட்டர் பதிவை 2,400க்கும் மேற்பட்டோர் மறுபதிவு செய்திருக்கின்றனர். மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து லைக் செய்துள்ளனர்.
பதிவு செய்த நாள் : December 19, 2016 - 07:56 AM