
கிளந்தான் சுல்தான் 5ஆம் முகமது, மலேசியாவின் 15ஆவது மாமன்னராகப் பொறுப்பேற்றார்.
பதவியேற்பு நிகழ்ச்சி கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் நடைபெற்றது. பதவிப் பிரமாணம் எடுத்த பிறகு, மாமன்னர் அதற்கான பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
கிளந்தான் மாநிலத் தலைநகர் Kota Bahruவிலிருந்து அவர் இன்று காலை கோலாலம்பூர் சென்றடைந்தார்.
மாமன்னராக அரியணை ஏறியுள்ள ஆக இளையவர் அவர். அடுத்த 5 ஆண்டு அவர் மலேசியாவின் மாமன்னராகப் பதவி வகிப்பார்.