ஞாயிறு, 18 டிசம்பர், 2016

வெனிசூலாவில் பணத்தாளுக்கு தடை.. பொதுமக்கள் வன்முறை

வெனிசுலாவில் உயர் மதிப்பு பணத்தாளுக்கு அரசு தடை விதித்த நிலையில் பணத் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
வெனிசூலாவில் 100 பொலிவர் மதிப்பிலான பணத்தாள்கள் இனி செல்லாது என இரண்டு தினங்களுக்கு முன்பு வெனிசுலா அரசு அறிவித்தது. பழைய பணத்தாளுக்கு பதிலாக புதிய பணத்தாள்கள் வங்கிகளில் விநியோகிக்கப்படும் எனக் கூறியது. ஆனால் அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வெனிசுலா மக்கள், செல்லாது என அறிவிக்கப்பட்ட பணத்தாள்களை கடைகளில் ஏற்க வேண்டும் என கூறி வன்முறையில் ஈடுபட்டனர். வணிக வளாகங்களை சூறையாடிய மக்கள் பணம் எடுக்கும் இயந்திரங்களை சேதப்படுத்தி தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர். பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களும் நடைபெற்றன.